Don't Miss!
- News
துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கீர்த்தி சுரேஷ், டோவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள வாஷி படப்பிடிப்பு நிறைவு பெற்றது!
சென்னை : தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கலக்கிக்கொண்டு உள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ்
இதுவரை நடிகையாக மட்டும் வலம் வந்து கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் இப்பொழுது அப்பா சுரேஷ் குமார் உடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்
3 டாப் ஹீரோ படங்களை தயாரிக்கும் இளையராஜா...எல்லாமே இதுக்கு தானா?
அந்தவகையில் முதல்முறையாக தயாரிக்கும் வாஷி படத்தில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கதாநாயகிக்கு முக்கியத்துவம்
தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதேசமயம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

ஒப்புக்கொள்ள மாட்டார்கள்
இதுவரை ஹீரோயினாக மட்டும் வலம் வந்து கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக தங்கையாக சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் நடித்து கலக்கி இருப்பார். பெரும்பாலும் முன்னணி நடிகைகளில் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க விரும்ப மாட்டார்கள் அப்படி நடித்து மார்க்கெட்டை இழந்து விடுவோம் என்று நினைத்து தங்கை கதாபாத்திரத்தில் அவ்வளவு எளிதில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

சிரஞ்சீவிக்கு தங்கையாக
ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார் அதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கில் சிரஞ்சீவியும் தங்கையாக நடிக்கிறார் தமிழில் அஜித் குமார் நடைபெறும் மிகப்பெரிய வெற்றிபெற்ற வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலோ சங்கர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்

வாஷி படப்பிடிப்பு நிறைவு
இவ்வாறு நடிப்பில் பரபரப்பாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் தந்தை சுரேஷ் குமாருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி யுள்ள கீர்த்தி சுரேஷ் அதில் முதல் திரைப்படமாக வாஷி என்ற படத்தை தயாரித்து வருகிறார். தனது பள்ளி கால நண்பரான விஷ்ணு ராகவ் இயக்கும் இந்த படத்தில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கீர்த்தி சுரேஷின் தயாரிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.