அட செம மெலோடியா இருக்கே.. வெளியானது ARM படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. டோவினோ செமயா இருக்காரே

சென்னை: இந்தியா முழுவதும் பிரபலமடைந்திருக்கும் நடிகர் டோவினோ தாமஸ் இப்போது ARM (Ajayante Randam Moshanam) என்ற படத்தில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது ARM. இந்தச் சூழலில் படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

"மின்னல் முரளி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டொவினோ தாமஸ். தற்போது அடுத்ததாக "ARM" படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ப்ரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் மலையாளத்தில் "கிளியே", தெலுங்கில் "சிலகே", தமிழில் "கிளியே", கன்னடத்தில் "கினியே" மற்றும் இந்தியில் "து ஹை" என்ற பெயர்களில் வெளியாகியுள்ளது.

tovino thomas arm kiliye


இசைக்குழு விவரம்: இந்த மெல்லிசை பாடல் ஒவ்வொரு மொழியிலும் அழகான வரிகளைக் கொண்டுள்ளது, அது ரசிகர்களின் மனதில் கேட்டவுடனே இடம் பிடித்துள்ளது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த பாடலில் திருச்சூரில் இருந்து 30 பேர் கொண்ட செண்ட மேளம் மற்றும் புடாபெஸ்டில் இருந்து 40 பேர் கொண்ட இசைக்குழு இடம்பெற்றுள்ளனர்.

பான் இந்திஅய பாடல்: தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் கபில் கபிலன் மற்றும் அனிலா ராஜீவ் ஆகியோர் பாடியுள்ளனர். வரிகளை கிருத்திகா நெல்சன் எழுதியிருக்கிறார். மலையாளத்தில், மனு மஞ்சித் பாடல்களை எழுதி, கே எஸ் ஹரிசங்கர் மற்றும் அனிலா ராஜீவ் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தியில், விக்ரம் எட்கே வரிகளை எழுத, அபய் ஜோத்புர்கர் மற்றும் அனிலா ராஜீவ் ஆகியோர் பாடியுள்ளனர்.

tovino thomas arm kiliye


ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த 3டி திரைப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் பேனரில் லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் யுஜிஎம் மூவிஸ் சார்பில் டாக்டர் ஜகாரியா தாமஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். "கான்", "சித்தா" போன்ற படங்களுக்கு பெரும் வரவேற்பை பெற்ற திபு நைனன் தாமஸ் "ARM" படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 25 அன்று வெளியிடப்பட்ட "ARM" படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் வைரலாகி நான்கு நாட்களில் 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கிருத்தி ஷெட்டி: இப்படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்கள் மூலம் கவனம் பெற்ற கிருத்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, கபீர் சிங், பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X