Lokesh Kanagaraj - லோகேஷ் கனகராஜுக்கு எகிறும் டிமாண்ட்.. மலையாள நடிகர் வெளிப்படுத்திய ஆசை

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆசை என மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்திருக்கிறார்.

கோதா, வைரஸ், தல்லுமலா,மின்னல் முரளி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் டோவினோ தாமஸ்.குறிப்பாக சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டான மின்னல் முரளி மலையாளம் தவிர தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் மெகா ஹிட்டானது. இதன் காரணமாக அவருக்கு மலையாள தேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் கூட்டம் எளிதாக சேர்ந்தது. மேலும், பல பெண்கள் டோவினோ தாமஸை தங்களது க்ரஷ்ஷாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

Tovino Thomas expressed his desire to act in director Lokesh Kanagarajs direction

2018 திரைப்படம்:

கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை அடிப்படையாக வைத்து 2018 என்ற திரைப்படம் உருவானது. இதில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க ஜூடே இயக்கியிருந்தார். படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இந்தத் திரைப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படலாம் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

டோவினோ தாமஸ் பேட்டி:

இந்நிலையில் படக்குழுவினர் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய டோவினோ தாமஸ், "லோகேஷ் கனகராஜ் என்னுடைய தல்லுமலா படம் பார்த்து விட்டு எனக்கு தொலைபேசி மூலம் பேசினார். அந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை.. அவரை போன்ற ஒரு கலைஞரிடம் இருந்து வரவேற்பு கிடைத்தால் அது மிகப்பெரிய விஷயம். அவர் பாராட்டுவதற்காக நேரம் ஒதுக்கி பாராட்டியது மதிக்கத்தக்கது.

தல்லுமலா அனைவருக்குமே புரியும்:

எனக்கு தல்லுமலா படம் குறித்த நம்பிக்கை நிறையவே இருந்தது. நான் பண்ண படங்களில் மிகவும் வித்தியாசமான படம் அது.. தொழில்நுட்பம் என்பதைத் தாண்டி அதன் திரைக்கதை உருவான விதம் அந்த படத்தை எல்லோருக்கும் பிடிக்க வைக்கும். மலையாளம் தெரியாமல் அந்தப் படத்தை பார்த்தால்கூட அனைவருக்கும் புரியும். ஏனெனில் அது நிலம் சார்ந்த திரைப்படமாக இருந்தது

Tovino Thomas expressed his desire to act in director Lokesh Kanagarajs direction

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எப்போது?:

லோகேஷ் கனகராஜுடன் நிச்சயம் வேலை பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவர் மிகப்பெரிய படங்கள் பண்ணிக்கொண்டு இருக்கிறார். நான் சின்ன சின்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். நானும், லோகேஷ் கனகராஜும் இணைவது நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என பேசினார்.

லோகேஷின் லியோ:

லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. லியோவை முடித்துவிட்டு கைதி படத்தின் இரண்டாம் பாகத்தையும், ரஜினியை வைத்து ஒரு படத்தையும் இயக்கவிருக்கிறார். இவற்றில் எந்தப் படத்தை முதலில் தொடங்கப்போகிறார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது. இயக்கம் மட்டுமின்றி சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X