உடற்பயிற்சியின் போது கீழே விழுந்த டோவினோ தாமஸ்... படபடத்து போன ரசிகர்கள்..!

கொச்சி : தமிழில் மாரி 2 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமான டோவினோ தாமஸ் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

Recommended Video

South Celebrity Then and Now Photoshop Looks | Surya, Ajith, Dulquer Salaman - Shameem Lukman

தனது ஒவ்வொரு படங்களின் மூலம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அனைவரையும் ரசிக்க வைத்து வரும் டோவினோ தாமஸ் சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

உடற்பயிற்சியில் மிகவும் கவனம் செலுத்திவரும் டோவினோ தாமஸ் உடற்பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தத்ரூபமாக எடுக்கப்படும்

தத்ரூபமாக எடுக்கப்படும்

மலையாள திரைப்படத்துறையில் உருவாகும் எதார்த்தமான திரைப்படங்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இன்றளவும் இருந்து வருகிறது. எளிமையான கதைக்களத்தை கொண்டு தத்ரூபமாக எடுக்கப்படும் மலையாள படங்கள் இந்தியாவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் டோவினோ தாமஸ்

நடிகர் டோவினோ தாமஸ்

மலையாளத் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாள நடிகர்களும் வேறுமொழி ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர், அந்த வகையில் சமீபத்தில் அனைவருக்கும் பரிச்சயமான நடிகர் டோவினோ தாமஸ் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

வில்லனாக நடித்த

வில்லனாக நடித்த

படத்திற்கு படம் வெவ்வேறு கதைகளை தேர்ந்தெடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் டோவினோ தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமாகி நெருக்கமானார். இவ்வாறு தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே வில்லனாக நடித்த டோவினோ மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

பேராதரவுடன் வெற்றி

பேராதரவுடன் வெற்றி

சமீபத்தில் இவர் நடித்த பாரன்சிக், மாயநதி, கோதா உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்காக உடலை மிக பயங்கரமாக தயார் செய்து கொண்டு வருகிறார். அவ்வாறு தயாராகி வரும் டோவினோ அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் உடற்பயிற்சிக் கூடத்தில் மிகப்பெரிய டயரை நிறுத்தி வைத்தவாறு அதை பாய்ந்து தாண்ட முயற்சிக்கும் டோவினோ கால் தடுமாறி மேலிருந்து கீழே விழும் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பதைபதைத்துப் போயுள்ள நிலையில், அடுத்த வீடியோவில் வெற்றிகரமாக அந்த பெரிய டயரை தாண்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

சிங்கம் போல சீறி

சிங்கம் போல சீறி

முதல் வீடியோவில் டோவினோ தாமஸ் கீழே விழுந்ததை பார்த்து பதைபதைத்த ரசிகர்கள் இரண்டாவது வீடியோவில் சிங்கம் போல சீறி அந்த டயரை தாண்டியது பார்த்து இன்ப அதிர்ச்சியில் டோவினோ தோமஸை பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X