»   »  தனுஷுக்கு வில்லன் ஆன சேச்சிகளின் மனம் கவர்ந்த நடிகர்

தனுஷுக்கு வில்லன் ஆன சேச்சிகளின் மனம் கவர்ந்த நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் மாரி 2 படத்தில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கிறார்.

Tovino Thomas is Dhanush' villain

இதை தனுஷே ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். டொவினோ நடித்து வரும் மலையாள படமான தரங்கத்தை தனுஷ் தான் தயாரிக்கிறார். இந்நிலையில் டொவினோ தனுஷுடன் நடிக்க உள்ளார்.

பி.ஆர். விஜயலட்சுமியின் அபியும் அனுவும் படத்தில் டொவினோ ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமாகும் டொவினோ வில்லனாகியுள்ளார்.

டொவினோ வில்லனாக நடிப்பதை இயக்குனர் பாலாஜி மோகனும் உறுதி செய்துள்ளார்.

English summary
Popular Malayalam actor Tovino Thomas is the villain of Dhanush's upcoming movie Maari 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil