விஷத்தோட ஏன் விபரீதம்? பாம்பைக் கையில் வைத்தபடி விளையாடும் பிரபல நடிகர்.. ரசிகர்கள் எச்சரிக்கை!

By

கொச்சி: பிரபல நடிகர் ஒருவர் பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப்: வைரல் வீடியோ

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில், தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அதற்கு முன், பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கி இருந்த அபியும் அனுவும் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

மின்னல் முரளி

மின்னல் முரளி

மலையாளத்தில் கூதரா, என்னு நின்டே மொய்தீன், ஆமி, நாம், லூசிஃபர், வைரஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது 'மின்னல் முரளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மலையாளம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது. பசில் ஜோசப் இயக்கும் இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் விளாட் ரிம்பர்க் இதில் பணியாற்றுகிறார்.

பாத்து விளையாடுங்க

லாக்டவுன் காரணமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் டோவினோ தாமஸ், தனது இன்ஸ்டாகிராமில் இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாம்பு ஒன்று அவரது கையில் சுற்றியபடி வளைந்து நெளிந்து வருகிறது. அதை வேடிக்கை பார்த்தபடி அவர் இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஐயையோ பாம்பு, பாத்து விளையாடுங்க என்று பலர் கூறியுள்ளார்.

ஜாக்கிரதையா இருங்க

ஜாக்கிரதையா இருங்க

கேரளாவில் பாம்புகளைப் பிடித்து விளையாடும் வாவா சுரேஷ் என்பவர் பிரபலம். அதனால், இன்னொரு வாவா சுரேஷ் என்று டோவினோவை சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஏங்க நீங்க விளையாட வேற ஒண்ணும் கிடைக்கலையா? என்று சிலரும் விஷத்துக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க என்று சிலரும் அவரை எச்சரிக்கை செய்துள்ளனர். ஐயோ விட்டிருங்க, அந்த பாம்பு பாவம் என்று ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

பாஸிகர் என்ற நாய்

பாஸிகர் என்ற நாய்

டோவினோ தாமஸ், அடுத்து கலா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதை ரோகித் இயக்குகிறார். இது வனத்துக்கும் மனிதனுக்குமான பிரச்னையை பற்றி பேசும்படம். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்காக அவர் விலங்குகளிடம் பழகி வருவதாகத் தெரிகிறது. இதையடுத்தே பாம்பை பிடித்து விளையாடுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பாஸிகர் என்ற நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X