ஓடிடியில் வெளியாகும் டொவினோ தாமஸின் களை!

சென்னை : மலையாள சினிமாவில் சிறப்பான திரைப்படங்களை கொடுத்து அதிகமாக கவனிக்க படுபவர் இளம் நடிகர் டொவினோ தாமஸ்.

தமிழில் மாரி 2ல் வில்லனாக நடித்து அறிமுகம் செய்யப்பட்டார்.

இப்பொழுது இவர் நடித்துள்ள களை மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

களை

களை

சினிமாத்தனம் இல்லாத ராவான சினிமாக்கள் எடுப்பதில் முதலிடத்தில் உள்ள மலையாள திரைப்படங்கள் மீது எப்போதுமே சினிமா ரசிகர்களுக்கு ஒரு கிரேஸ் உள்ளது. அந்தவகையில் இளம் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள களை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழில் தொடர்ந்து

தமிழில் தொடர்ந்து

கர்ணன், சுல்தான் என தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து அட்டகாச படுத்திக் கொண்டிருக்கும் நடிகர் லால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்க திவ்யா பிள்ளை டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ரோஹித் இயக்கியுள்ளார்.

தமிழிலும் வெளியிட

தமிழிலும் வெளியிட

சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. குறிப்பாக இதில் வெறித்தனமாக வரும் ஒரு சண்டைக்காட்சியில் டொவினோ தாமஸ் டூப் போடாமல் நடித்து பிரமிக்க வைத்துள்ளார். மாரி 2ல் வில்லனாக நடித்து ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருப்பதால் இந்த படத்தை தமிழிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அமேசான் பிரைமில்

அமேசான் பிரைமில்

தற்போது கொரோனா இரண்டாவது அலையால் மீண்டும் திரையரங்குகள் முற்றிலுமாக மூடப் பட்டிருப்பதால் களை ஓடிடியில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் இந்தப்படம் அமேசான் பிரைமில் இந்த வாரம் வெளியாக உள்ளது என தகவல்கள் கசிந்துள்ளது.

More from Filmibeat

Read more about: tovino thomas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X