If You’re Bad, I’m Your Dad: அப்பா, மகன் ரெண்டு பேர்ல யாரு கெத்து.. வைரலாகும் செம ஹாட் போட்டோ!

சென்னை: மாரி 2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்த பிரபல மலையாள நடிகர், தனது அப்பாவுடன் எடுத்துக் கொண்ட ஒர்க்கவுட் புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

Recommended Video

South Celebrity Then and Now Photoshop Looks | Surya, Ajith, Dulquer Salaman - Shameem Lukman

ஹீரோயின்கள் தான் ஹாட்டாக புகைப்படங்கள் வெளியிட வேண்டுமா? நாங்களும் வெளியிடுகிறோம் பாருங்க என சட்டை அணியாமல் நடிகர் டொவினோ தாமஸ் சிக்ஸ்பேக் உடற்கட்டை காட்டியபடி தனது அப்பாவுடன் போஸ் கொடுத்துள்ளார்.

மலையாள ஹீரோ

மலையாள ஹீரோ

மலையாள திரையுலகின் இளம் ஹீரோ டொவினோ தாமஸ். 2012ம் ஆண்டு வெளியான பிரபுவின்டே மக்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மாயநதி, வைரஸ், லூசிபர், உயரே, கல்கி, அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டு, ஃபாரன்சிக் உள்ளிட்ட ஏகப்பட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

மாரி 2

மாரி 2

2018ம் ஆண்டு மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் இவரது அபியும் அனுவும் திரைப்படம் வெளியானது. அதன் பின்னர், இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் டொவினோ தாமஸ்.

ஐ எம் யுவர் டேட்

ஐ எம் யுவர் டேட்

மாரி 2 படத்தில் டொவினோ தாமஸை பார்த்து நடிகர் தனுஷ், "If You're Bad, I'm Your Dad" என்ற நீ கெட்டவன்னா உனக்கு அப்பன் நான் டா.. என்கிற வசனம் இடம்பெற்று இருக்கும். தற்போது அது போல, தனது தந்தையுடன் இந்த லாக்டவுனில் கடும் உடற்பயிற்சி செய்து வேற லெவல் தோற்றத்திற்கு மாறி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

பேஸ்மேக்கர் வைத்தாலும்

பேஸ்மேக்கர் வைத்தாலும்

என் அப்பா, என்னோட ஆசான், எனக்கு ஊக்கமளிப்பவர், சரியான பாதையில் என்னை வழி நடத்துபவர், அப்புறம் என் ஒர்க்கவுட் பார்ட்னர் என கேப்ஷன் கொடுத்துள்ள டொவினோ தாமஸ், கடந்த 2016ம் ஆண்டு தனது தந்தைக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு இருப்பது குறித்தும், அந்த எக்ஸ்ட்ரா மஸல் அதுதான் என்றும், ஆனாலும், அதற்கெல்லாம் மனுஷன் சோர்ந்தே போக மாட்டார் என்றும் பதிவிட்டு பலரையும் கண் கலங்க வைத்து விட்டார்.

பிருத்விராஜ் பாராட்டு

பிருத்விராஜ் பாராட்டு

மலையாள திரையுலகின் இளம் நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகின்றனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்விராஜ், டொவினோ தாமஸின் அப்பாவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். மேலும், இதில் யார் செம ஹாட் என்ற வாக்கெடுப்பிலும் டொவினோவை வீழ்த்தி கெத்துக் காட்டுகிறார் அவரது அப்பா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X