மலையாள பிரபல நடிகரின் க்யூட் ஃபேமிலி போட்டோ..அன்பை அள்ளித் தந்த ரசிகர்கள்!

கொச்சி : மலையாளத்தில் பிரபல இளம் நடிகராக இருந்து வரும் டோவினோ தாமஸ் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் அசர வைத்து வருகிறார்.

தமிழில் மாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்த இவர் தமிழ் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டார். இந்நிலையில், இவர்,விரைவில் ஹீரோவாக தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்த டோவினோ தாமஸுக்கு பல பிரபலங்களும் இவருக்கு ஓயாமல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தற்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள இவர் வெளியிட்ட க்யூட் ஃபேமிலி போட்டோ அனைவரின் இதயங்களையும் வென்று அன்பை அள்ளி வருகிறது.

மம்முட்டியுடன் நடிக்கிறார்

மம்முட்டியுடன் நடிக்கிறார்

மலையாள சினிமாவில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வரும் டோவினோ தாமஸ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் "மின்னல் முரளி" திரைப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் நிலையில் மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தில் இவர் நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் அதனை மறுத்துள்ளது அப்படக்குழு.

மீண்டும் திரையில்

மீண்டும் திரையில்

மாயநதி திரைப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து "கானேக்கானே" திரைப்படத்தில் நடித்து வரும் டோவினோ தாமஸின் படப்படிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகி உள்ளதை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் திரையில் கலக்குவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

டஹான்

டஹான்

டோவினோ தாமஸுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை சமூக வலைத்தளங்களின் மூலமாக தெரிவித்த டோவினோவுக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்தனர். அந்த குழந்தைக்கு டஹான் என பெயரிட்டுள்ளனர்.

Recommended Video

South Celebrity Then and Now Photoshop Looks | Surya, Ajith, Dulquer Salaman - Shameem Lukman
க்யூட்டான போட்டோ

க்யூட்டான போட்டோ

இந்நிலையில் விடுமுறையில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வரும் இவர், சுற்றுலா சென்ற இடத்தில் தனது குட்டி மகனுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருக்க அவரது மகள் அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றவாறு உள்ள க்யூட்டான ஃபேமிலி புகைப்படத்தை டோவினோ தாமஸ் பகிர்ந்ததை அடுத்து க்யூட்டான போட்டோவுக்கு ரசிகர்கள் தங்களது அன்பை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X