சிங்கம் போல சீறிப்பாயும் டொவினோ தாமஸ் .. "மின்னல் முரளி" அதிரடி ஃபர்ஸ்ட் லுக் !

கொச்சி : துல்கர் சல்மான், நிவின் பாலி வரிசையில் மலையாள நடிகர்களில் தமிழ் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் டொவினோ தாமஸ்.

Recommended Video

Friendship Motion Poster Hidden Details | Losliya Mariyanesan, Harbhajan Singh, Arjun Sarja

2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தின் மூலம் தனுஷுக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நேரடி தமிழ் திரைப்படத்தின் மூலம் டொவினோ தாமஸ் அறிமுகம் செய்யப்பட்டார்.

மலையாளத் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்பொழுதும் வரவேற்பு இருந்து வரும் நிலையில் டொவினோ தாமஸ் நடித்த மாயநதி, பாரன்சிக், வைரஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தற்போது இவர் நடித்து வரும் " மின்னல் முரளி" படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகியுள்ளது.

தமிழிலும் ரசிகர்களை

தமிழிலும் ரசிகர்களை

மலையாள திரையுலகில் தற்போது முன்னணி இளம் நாயகனாக வளர்ந்து வரும் டொவினோ தாமஸ் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் அதிக ரசிகர்களை கொண்டு மிக பிரபலமாக உள்ளார்.

நேரடி தமிழ் திரைப்படத்தில்

நேரடி தமிழ் திரைப்படத்தில்

தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டொவினோ தாமஸ் தமிழில் மாரி 2 திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நேரடி தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

அதிக தமிழ் ரசிகர்களை

அதிக தமிழ் ரசிகர்களை

இவர் மலையாளத்தில் நடித்த மாயநதி, கோதா, பாரன்சிக், வைரஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடமும் மிகப் பிரபலமாக உள்ள நிலையில், மலையாள நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் நிவின் பாலி வரிசையில் அதிக தமிழ் ரசிகர்களை கொண்ட நடிகர் டொவினோ தாமஸ் ஆவார்.

"மின்னல் முரளி"

இந்நிலையில் "குஞ்சிராமாயணம்" "கோதா" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாசில் ஜோசப் இயக்கத்தில் மீண்டும் டொவினோ இணைந்து "மின்னல் முரளி" என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

சீறி வரும் சிங்கம் போல

சீறி வரும் சிங்கம் போல

முகத்தை முழுவதும் மூடிக் கொண்டு சீறி வரும் சிங்கம் போல தீப்பிளம்பு நடுவே புத்தகத்தை கையில் பற்றிக்கொண்டு ஓடி வருவது போல அமைந்துள்ள இந்த வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் மிரள வைத்துள்ள நிலையில் இத்திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என 5 மொழிகளில் வெளியிடப்படுகிறது.

ஓணம் தினத்தன்று டீஸர் ரிலீஸ்

ஓணம் தினத்தன்று டீஸர் ரிலீஸ்

தமிழ் மற்றும் மலையாளத்தில் "மின்னல் முரளி" என்ற பெயரிலும், கன்னடத்தில் மிஞ்சு முரளி என்ற பெயரிலும், ஹிந்தியில் மிஸ்டர் முரளி மற்றும் தெலுங்கில் மெருப்பு முரளி என்ற பெயரிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டீஸர் வருகின்ற ஆகஸ்ட் 31 ஓணம் தினத்தன்று வெளியிடப்பட உள்ளதாக இப்படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X