Identity Review: சுத்தி சுத்தி ஒரே குழப்பம்.. முடியலடா சாமி.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு பல திரைப்படங்கள் வெளியாகி வசூலை அள்ளிய நிலையில், இந்த ஆண்டும் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில் புத்தாண்டு பிறந்த உடனே ஐடென்டிட்டி திரைப்படம் வெளியாகி உள்ளது. நேற்று தியேட்டரில் வெளியான இப்படத்தில், டொவினோ தாமஸ், திரிஷா, வினய், ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ச்சனா ரவி, கோபிகா ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படத்தை இயக்குனர்கள் அகில் பால், அனஸ் கான் எழுதி இயக்கி,ராஜு மல்லியத் தயாரித்துள்ளார். இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
இந்த படத்தின் கதை ஆரம்பிக்கும் போது, பெண்கள் உடை மாற்றும் ட்ரயல் ரூமில் கேமராவை வைத்து ஒருவன் ரெக்கார்டு செய்து, அந்த வீடியோவை வைத்து, அந்த பெண்களை பிளாக் மெயில் செய்வதை வேலையாக வைத்து இருக்கிறான். திடீரென ஒரு நாள் அவனை யாரோ கொன்றுவிட்டு அவன் வைத்து இருந்த வீடியோக்கள் அனைத்தையும் அழித்து விடுகின்றனர். அந்த கொலையை கண்டுபிடிக்க கர்நாடகாவில் இருந்து போலீஸ் அதிகாரியாக வினய் வருகிறார். காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் டோ வினோத் தாமஸ்.

கொலை செய்தது யார்: இந்த கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான திரிஷா, இந்த கொலைக்கு உதவுவதற்காக கொலையாளியின் அங்க அடையாளங்களை சொல்லி படம் வரைகிறார்கள். கடைசியில் அந்த உருவம் டோவினோ தாமஸ் போல இருக்கிறது. இந்த கொலைக்கு டோவினோ தாமசுக்கும் என்ன சம்மந்தம், அந்த கொலையை செய்தது யார்? என்பது தான் இந்த படத்தின் கதை என நினைத்தால், அதையும் தாண்டி வேறு ஒரு கதை இருக்கிறது.
ஆமைவேகத்தில் கதை: படம் ஆரம்பிக்கும் போது மிகவும் மெதுவாக செல்கிறது அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை படம் பார்க்கும் ஆடியன்ஸே சொல்லிவிடும் அளவில் இருந்தது. ஆனால், வழக்கமாக மலையாள சினிமாவில் பயன்படுத்தும் ஒரு யுக்தியை பயன்படுத்தி படத்தை சுவாரசியமாக ஆக்கி இருக்கிறார் இயக்குநர். ஆரம்பத்தில் கதை மெதுவாக நகர்த்திவிட்டு, பிறகு வேறு கதையில் ட்ராவல் ஆகி செல்லும் போது, ஆடியன்சுக்கு சலிப்பு வந்துவிடுவதால், அடப்போப்பா என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. அதேபோல படத்தின் இரண்டாம் பாதியும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சுவாரசியமாக இல்லை.
எதார்த்தமான நடிப்பு: திரிஷாவும் ஒரு பேஸ் ப்ளைண்ட் பெண்ணாக படம் முழுவதும், ஒரு குழம்பிய மனநிலையிலேயே இருந்தாலும்,கடைசியில் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஆள் யார் என்பதை கண்டுப்பிடிக்கும்போது நன்றாக இருந்தது. டொவினோ தாமஸ் வழக்கம் போல எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அதே போல வினய் தனக்கு கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்.
முடியலடா சாமி: ஆனால் படம் எடுத்த விதம், படத்திற்காக செய்த செலவு என அனைத்தும் நன்றாக இருந்தது. ஆனால் படத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் மீது சலிப்பு வந்துவிட்டதால், படத்தை ரசிக்க முடியவில்லை. அதேபோல, ஹீரோவிற்கு ஒரு முன் கதை பிளாஷ் பேக்கில் வருகிறது. அது படத்தின் கதையோடு ஒட்டவே இல்லை. அதே போல, த்ரிஷா, கேள்வி கேட்டால் தான் பதில் சொல்லுவேன், பல காட்சிகளில் அமைதியாக இருப்பதால், திறமையான நடிகையான த்ரிஷாவை வீணாக்கி விட்டார்கள். மொத்தத்தில் இந்த படத்தின் கதை முடிந்து முடிந்து மீண்டும் ஆரம்பிக்கிறது. படத்தை பார்க்க முடியவில்லை என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











