டாக்ஸிக் ரிலீஸ் தேதியை அறிவித்த கேவிஎன் நிறுவனம்.. ஜனநாயகன் ரிலீஸ் தேதியை கேட்கும் தளபதி ரசிகர்கள்!

சென்னை: கேஜிஎப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் டாக்ஸிக். மாதவன் நடிப்பில் வெளியான நள தமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்த கீது மோகன்தாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், அவரது இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் கடைசி இடத்தில் இருந்து வந்த கன்னடத் திரையுலகம் தற்போது முன்னிலைக்கு வர முக்கிய காரணமே பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் தான். அந்த படத்தை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான காந்தாரா திரைப்படமும் கன்னடத் திரையுலகத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

Toxic release date announced officially Now Vijay fans asking Jana Nayagan release date

யாஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்கிற அறிவிப்பு ரிலீஸ் தேதியுடன் தற்போது வெளியாகி உள்ளது. அதே தயாரிப்பு நிறுவனம் தான் தளபதி விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தையும் தயாரித்து வரும் நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

டாக்ஸிக் ரிலீஸ் தேதி: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் , கியாரா அத்வானி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படம் இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி அந்த திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை தற்போது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

யாஷ் மிரட்டப்போறாரு: நீண்ட தாடி, லாங் கோட், பெரிய தொப்பி, வாயில் சுருட்டு என முதல் தோற்றத்திலேயே மிரட்டிய யாஷ் அடுத்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸை மிரட்டப் போகிறார் என அவரது ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் டாக்ஸிக் மற்றும் யாஷ் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Toxic release date announced officially Now Vijay fans asking Jana Nayagan release date

ஜனநாயகன் ரிலீஸ் தேதி எப்போ?: எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துவரும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்நிலையில் விஜய் ரசிகர்கள், டாக்ஸிக் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திடம் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை கேட்டு வருகின்றனர்.

Take a Poll

25 நாட்களில் படப்பிடிப்பு முடிவு: தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து உள்ள நிலையில், முழு வீச்சில் அரசியலில் இறங்குவதற்காக அடுத்த 25 நாட்களுக்குள் ஜனநாயகன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து விடுவார் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகுமா அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுமா என்கிற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், கூடிய சீக்கிரமே தயாரிப்பு நிறுவனம் அதற்கு தக்க பதிலை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X