தெறிக்கும் தமிழ் படம் 2.0 போஸ்டர்: சிவா தியான போஸ் யாரை கலாய்ச்சது தெரியும்ல?
சென்னை: சி. எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடிக்கும் தமிழ் படம் 2ம் பாகத்தின் புதிய போஸ்டரிலேயே தெறிக்கவிட்டுள்ளனர்.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அந்த அளவுக்கு பாரபட்சமின்றி அனைவரையும் மரண கலாய் கலாய்த்திருந்தனர்.
இந்நிலையில் தான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ் படம் 2.0 படத்தை சசிகாந்த் தனது ஒய்நாட் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார்.
தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் படம் 2.0-ன் ரிலீஸ் போஸ்டரை நடிகர் சித்தார்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் தமிழ் படம் 2.0 மே 25ம் தேதி ரிலீஸ், தமிழ் ராக்கர்ஸில் மே 26ம் தேதி ரிலீஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்வீட்
ரிலீஸ் போஸ்டரை பார்த்த இயக்குனர் அமுதன், நாளை ரிலீஸாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலாவது ஏதாவது உருப்படியாக செய்யுங்கள். இது போன்று பொறுப்பில்லாமல் செய்யாதீர்கள் என்று தயாரிப்பாளரிடம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
புது லுக்
தமிழ் படம் 2.0-ன் புதிய போஸ்டர் இன்று ரிலீஸாகியுள்ளது. அதில் சிவா சமாதி ஒன்றில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்கிறார். போஸ்டரை பார்த்ததுமே அவர்கள் யாரை கலாய்த்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது. உங்களுக்கும் தெரிந்துவிட்டது அல்லவா?
நடனம்
மிர்ச்சி சிவாவுக்கு இன்று பிறந்நதாள். இதையொட்டி அமுதன் போட்டுள்ள ட்வீட்டில், நடனத்துக்கு இன்று பிறந்தநாள் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆவல்
சிவா தியானம் செய்யும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், போஸ்டரிலேயே இந்த கலாய் கலாய்க்கிறார்களே. சீக்கிரமா படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுங்க அமுதன். ரொம்ப ஆவலாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











