ரீலில் 'அவரை' கலாய்ச்சாங்கன்னு பார்த்தா ரியலில் 2.0, விஷாலை மரண பங்கம் செய்த டி.பி. 2.0 குழு

By Siva

Recommended Video

விஷாலையும் ரஜினியையும் வச்சி செஞ்ச தமிழ் படம் 2.0 படக்குழு- வீடியோ

சென்னை: தமிழ் படம் 2.0 படக்குழு ரஜினியின் 2.0 மற்றும் விஷாலை கலாய்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு தமிழ் படம் 2.0 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பட ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இதையடுத்து இது குறித்து படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரிலீஸ்

ரிலீஸ்

தமிழ் படம் 2.0 மே 25ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிப் போட வேண்டியுள்ளது.

இந்த படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலை அதிகம் உள்ளது. முக்கியமாக எங்கள் முக்கிய நடிகர்களை நன்றாக காட்ட வேண்டியுள்ளது.

ஹீரோ

ஹீரோவின் பைசெப், தோள்பட்டை ஆகியவை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டுடியோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஹீரோயினின் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க மற்றும் கண்ணுக்கு கீழ் உள்ள பகுதியை அழகாக்க ஆம்ஸ்டர்டேமில் உள்ள ஸ்டுடியோவை அணுகியுள்ளோம். நிறைய விஎஃப்எக்ஸ் வேலை செய்ய வேண்டியுள்ளதால் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளோம். பயப்பட வேண்டாம், விரைவில் தியேட்டரில் சந்திப்போம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி

ரஜினி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்த 2.0 படத்தில் விஎஃப்எக்ஸ் வேலை அதிகம் இருப்பதாகக் கூறி ரிலீஸை தள்ளிப் போட்டனர். அதை தான் தமிழ் படம் 2.0 குழு இப்படி அறிக்கை விட்டு கலாய்த்துள்ளது. ஏற்கனவே படத்தில் சமாதியில் சிவா தியானம் செய்வது போன்று காட்சி வைத்து ஒரு பெரிய ஆளை கலாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

சில ரிப்பேர் வேலை செய்ய சினிமா துறையில் வேலைநிறுத்தம் நடந்ததால் விடப்பட்ட 2 மாத கோடை விடுப்பு காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போக வில்லை என்று தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். விஷால் தலைமையில் சினிமா ஸ்டிரைக் நடந்தை இப்படி மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X