»   »  சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க தலைவராக டிபி கஜேந்திரன் தேர்வு!

சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க தலைவராக டிபி கஜேந்திரன் தேர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

75 ஆண்டுகால சிடிஏ என்ற சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் (Cinema Technicians Associations) சங்க தலைவராக இயக்குநர் டிபி கஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் சமீபத்தில் நடை பெற்றது.

அந்த கூட்டத்தில் தயாரிப்பாளர், இயக்குனருமான கிருஷ்ணசாமி முன்னிலையில் அந்த சங்கத்தின் தலைவராக நடிகர், இயக்குனர் தயாரிப்பாளரான டிபி கஜேந்திரன் தலைவராக ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

TP Gajendiran elected as CTA president

சேர்மனாக என்.கே.கிருஷ்ணசாமி, துணைத் தலைவர்களாக ஆனந்த மோகன், சிவராஜா, செயலாளர்களாக ஜே.வி.ருக்மாங்கதன், மயிலை குமார், பொருளாளராக கஸ்தூரி மூர்த்தி மற்றும் செயற்குழு உறுபினர்களாக ரகுநாதரெட்டி, ரவிபாபு, அமுதவாணன், லஷ்மியாதவள்ளி, பி.சாய்குமார், மகேந்திரன், டி.வி..ராமாராவ், விஜய்சந்தர், சாகர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தலைவராகப் பொறுப்பேற்ற டி.பி.கஜேந்திரன் பேசும்போது, சங்கத்தை திறம்பட நடத்தி கலைஞர்களுக்கு நல்லது நடக்கப் பாடுபடுவேன் என்றார்.

English summary
Director TP Gajendiran has been selected as the President of Cinema Technicians Association.
Please Wait while comments are loading...