twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ.1 கோடி மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்

    By Mayura Akilan
    |

    சென்னை: அமெரிக்க பாடகரை ஒப்பந்தம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒப்பந்ததாரர்கள் மோசடி செய்துவிட்டதாக இயக்குநர் டி. ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவர், குறள் டி.வி. கிரியேசன் நிறுவனம் சார்பில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    T Rajendar

    அதில் அவரது மகனும் நடிகருமான சிம்பு பாடி இருக்கும் 'லவ் ஆந்தம்' (காதல் கீதம்) என்ற இசை ஆல்பம் தொடர்பாக அமெரிக்க பாடகர் ஒருவரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி 2 பேர் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் கூறியதாவது:

    எனது மகன் சிலம்பரசன் பாடி தயாரித்துள்ள 'லவ் ஆந்தம்' என்ற இண்டர் நேஷனல் இசை ஆல்பத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம். இதற்காக தமிழகத்தில் வசித்து வரும் ராம்ஜி சோமா மற்றும் கனடாவைச் சேர்ந்த டெரிபாத் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

    அந்த ஒப்பந்தத்தின்படி பாடகர் ஏகானை அவர்கள் 'புக்' செய்து தரவேண்டும். முடியாத பட்சத்தில் நான் கொடுக்கும் பணத்தை திருப்பி தர வேண்டும். ஆனால் இருவரும் அவர்கள் கூறியபடி நடந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களிடம் கொடுத்த 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலரை (ரூ.1 கோடி) திருப்பிக் கேட்டேன்.

    ஆனால் அவர்கள் திருப்பி தராமல் இழுத்தடித்தனர். இதற்கிடையே வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் பாடகர் ஏகானை நான் ஒப்பந்தம் செய்து அவரை சென்னைக்கு வரவழைத்து பாடல் பதிவுகளையும் முடித்து விட்டேன். இதன் பிறகுதான் ராம்ஜி சோமாவும், டெரிபாத்தும் மோசடி பேர்வழி என எனக்கு தெரியவந்தது.

    இதுதொடர்பாக நான் அனுப்பிய வக்கீல் நோட்டீசையும் வாங்கிக் கொள்ளாமல் அவர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கிடையே வேறு சிலரையும் இதே போல் ஏமாற்ற நினைப்பது எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே இருவர் மீதும் இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்.

    அவர்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து இழந்த எனது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று பிரிந்து கிடக்கும் மனிதர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த இசை ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

    English summary
    Director T Rajendhar has given a complaint against two persons of cheating Rs 1 crore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X