‘வாலு’ சிம்புவுக்காக ‘தாறுமாறாக...’ பாடிய டி.ஆர்
சென்னை: தனது மகன் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வாலு படத்திற்காக பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் அவரது தந்தை விஜய.டி.ராஜேந்தர்.
சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டப் படங்கள் வாலு மற்றும் வேட்டைமன்னன். இந்த இரண்டு படங்களிலுமே ஹன்சிகா தான் நாயகி.
இதில் வாலு படத்தை புதுமுக இயக்குனர் விஜயசந்தர் இயக்குகிறார். வேட்டை மன்னனை இன்னொரு புதுமுக இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இவ்விரண்டு படங்களையுமே நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தான் தயாரிக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு....
இந்நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது ‘வாலு' படத்தின் படப்பிடிப்பு. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தாறுமாறு....
இப்படத்தில் டி.ராஜேந்தர் தனது மகன் சிம்புவிற்காக பாடல் ஒன்றை தமன் இசையில் பாடியிருக்கிறார். ‘தாறுமாறு...' எனத் தொடங்குகிறது அப்பாடல்.

ஒஸ்தியான பாடல்....
இதற்கு முன்னர் டி.ராஜேந்தர் தமன் இசையில் சிம்பு நடித்த ‘ஒஸ்தி' படத்தில் இடம் பெற்ற ‘கலாசலா...' என்ற பாடலை பாடியிருக்கிறார்.

இசை வெளியீடு....
'வாலு' படத்தின் இசைவெளியீடு காதலர் தினத்தன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











