விளம்பரத்தால் வந்த சோதனை.. பிரபல நடிகருக்கு எதிராக போராட்டம் அறிவித்த வணிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ஆன்லைன் விளம்பரத்திற்கு வணிகர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுல் ஒருவர் ஆவார். தனது தனித்துவமிக்க நடிப்பாலும் திறமையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்ட விஜய் சேதுபதிக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. வருடத்திற்கு 5,6 படங்களுக்கு மேல் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

அடுத்த மாதம்
அடுத்த மாதம் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படம் ரிலீஸாகிறது. அதனை தொடர்ந்து மாமனிதன் உள்ளிட்ட படங்களும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பர படங்கள்
ஹீரோ மட்டுமின்றி ஆன்ட்டி ஹீரோ ரோலிலும் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதோடு விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆன்லைன் விற்பனைக்கு ஆதரவு
அந்த வகையில் தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அந்த நிறுவனத்தின் பல சரக்கு ஆன்லைன் விற்பனைக்கு ஆதரவாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

வெறும் நடிப்பா?
இந்த விளம்பரம் ஒளிபரப்பாக தொடங்கிய போதே சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கண்டித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் வெறும் நடிப்பா என்று கேட்டனர் நெட்டிசன்கள்.

வணிகர்கள் கண்டனம்
இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்த ஆன்லைன் விளம்பரத்திற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுகுறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கி கொண்டு நடிகர் விஜய் சேதுபதி துணை போவதாக கண்டித்துள்ளது.

முற்றுகை போராட்டம்
மேலும் விஜய் சேதுபதியின் இந்த நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 4-ம் தேதி விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











