எதிர்பார்க்கல.. நீங்க எப்டி அப்டி பண்ணலாம்.. விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வணிகர்கள்!
சென்னை: ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவான விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதியை கண்டித்து வணிகர் பேரமைப்பினர் இன்று அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஹீரோவாக மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விளம்பரம் ஒன்றில் நடித்த விஜய் சேதுபதிக்கு அது பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

விளம்பரம்
நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் பலசரக்கு விற்பனை விளம்பரத்தில் நடித்தார். அந்த விளம்பரம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி ஒளிபரப்பப்படுகிறது.

வணிகர்கள் எதிர்ப்பு
இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்போதே விஜய் சேதுபதியை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர். இதனைதொடர்ந்து விஜய் சேதுபதியின் இந்த ஆன்லைன் விளம்பரத்திற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

அலுவலகம் முற்றுகை
சிறுகுறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கி கொண்டு நடிகர் விஜய் சேதுபதி துணை போவதாக கூறி கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எதிராக முழக்கம்
ஆன்லைன் வர்த்தக செயலி விளம்பரத்தின் ஒப்பந்தத்தை விஜய் சேதுபதி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக முழகக்கமிட்டனர்.

கைது
இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


Click it and Unblock the Notifications











