ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய்.. நியூ லுக்கில் மாஸ் என்ட்ரி ப்ரோ.. தளபதி பக்கம் தல ரசிகர்கள்
சென்னை: ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய் நடிக்கும் முக்கியமான காட்சிகள் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் புதிய கெட்டப்பில் அசத்தியிருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து விஜயின் ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர். தற்போது விஜய்க்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் களம் இறங்கியிருப்பது தான் ஆச்சர்யம் அளித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் பாலய்யா நடித்த பகவத் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. மேலும், மமீதா பைஜூ விஜய்க்கு மகளாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பிரியாமணி இதில் என்ன கதாப்பாத்திரம் என்பது சஸ்பென்சாக இருந்தாலும், அரசியல்வாதியாக நடித்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஓடிடி உரிமம்: சமீபத்தில் விஜய் நடித்து முடிப்பதற்குள்ளாகவே ஜனநாயகன் படத்தின் ஓடிடி தள உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியானது. இதில், ரஜினி நடித்துள்ள கூலி படத்தை காட்டிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் 121 கோடிக்கு பெற்றிருப்பதாக தகவல் வெளியானது, கூலி படம் 110 கோடி என்றும் கூறப்படுகிறது. இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகளும் விரைவில் முடிய இருப்பதாகக் கூறப்படுகிறது.
மே மாதம் நிறைவு: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற மே 15 தேதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாகவே விஜய்யின் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், அரசியல் குறித்த காட்சிகளும், வசனங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் கணித்துள்ளனர். கமலிடம் கூறிய ஒன்லைன் கதையைத்தான் ஹெச்.வினோத் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

புதிய கெட்டப்பில் விஜய்: ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜயின் புதிய கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற ரசிகர்களை பார்த்து விஜய் கைகாட்டி அசைத்துள்ளார். இதில், கட்டம் போட்ட சட்டை என க்ளீன் சேவ் என அரசியல்வாதி தோற்றத்தில் இருக்கிறார். விஜயை பார்த்த ரசிகர்கள் கரகோசத்துடன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். தற்போது இதுதொடர்பான வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விஜயை காண்பதற்கு இளைஞர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இந்த முறை விஜய் ரசிகர்களை காட்டிலும் அஜித் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குட் பேட் அக்லி படத்தில் விஜய் வசனத்தை பேசியிருப்பதால் இந்த மாற்றம் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











