விதியை மீறிய விஜய்.. அதிரடியாக அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார்.. என்ன ஒரே சிக்கலா இருக்கே!
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் காட்சிகள் ஒரு பக்கம் லீக் ஆகி வரும் நிலையில், ரிலீஸ் பிரச்சனை அதை விட பெரிதாக மாறி உள்ளது.
இது தவிர விலங்குகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், செய்தியாளர்களை தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் சாலை விதிகளை மீறியதாக அவர் மீது போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்த புதிய தகவலும் பரபரப்பை கிளப்பி உள்ளன.

தாக்கியதாக புகார்
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் யானை உள்ளிட்ட விலங்குகளை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக கிடைத்த தகவலை அடுத்து சில செய்தியாளர்கள் ட்ரோன் மூலம் உள்ளே நடப்பதை அறிய முயற்சித்தனர். அதனை அறிந்து கொண்டு அந்த இடத்துக்கு வந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸாரை தாக்கினர். விஜய் மக்கள் மன்ற நிர்வாகி உள்ளிட்ட 7 பேர் மீது பத்திரிகையாளர்கள் போலீஸில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விதி மீறிய விஜய்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பனையூரில் நடைபெற்ற பிரியாணி விருந்து விழாவில் கலந்து கொண்டு ரசிக மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்தார். அப்போது அவரது காருக்குள் கை விட்டு சிலர் விஜய்யை தொட முயற்சித்த வீடியோக்கள் எல்லாம் டிரெண்டாகின. இந்நிலையில், நடிகர் விஜய்யின் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியிருக்காரே இது தொடர்பாக எந்த ஆக்ஷனும் இல்லையா என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

விஜய்க்கு அபராதம்
உடனடியாக அந்த பொதுஜனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து காவல்துறையினர் விதியை மீறியதற்காக நடிகர் விஜய்யின் காருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என போலீஸார் அந்த தகவலை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த ஸ்க்ரீன் ஷாட் சோஷியல் மீடியாவில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

ஏகப்பட்ட சிக்கல்
நடிகர் விஜய்யின் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், விஜய்யை சுற்றி ஏகப்பட்ட சிக்கல்கள் வலம் வருகின்றன. சாதாரண போக்குவரத்து விதிகளை கூட நடிகர் விஜய் போன்ற நபர்கள் ஏன் கடைபிடிப்பதில்லை என அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நாக சைதன்யா சிக்கினார்
சமீபத்தில் ஹைதராபாத்தில் இதே போன்று நடிகர் நாக சைதன்யாவின் காருக்குள்ளும் உள்ளே இருப்பவை தெரியாதபடி கருப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்த நிலையில், ஹைதராபாத் போலீஸார் அவருக்கு அபராதம் விதித்து இருந்தனர். இதே போல பல சினிமா பிரபலங்கள் காரில் தாங்கள் செல்வது தெரியக் கூடாது என்பதற்காக இப்படி கருப்பு ஸ்டிக்கர் ஓட்டிக் கொண்டு அபராதம் செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











