‘88’ அறிமுகம் தந்தது, டிராபிக் ராமசாமி அடையாளம் தந்துள்ளது : நடிகை உபாசனா

டிராபிக் ராமசாமி மூலம் தமிழில் தனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகை உபாசனா.

சென்னை: டிராபிக் ராமசாமி படம் மூலம் தமிழில் தனக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளதாக நடிகை உபாசனா கூறுகிறார்.

சுமார் 80க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்த உபாசனா, தமிழில் 88 என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர்.

இவர் தற்போது சமூக ஆர்வலர் டிராபிக் வரலாற்றுப் படமான டிராபிக் ராமசாமி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பெருமை:

பெருமை:

இது குறித்து அவர் கூறுகையில், "டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு. அதனால் பரதநாட்டியம் கிளாசிகல் டான்ஸ் கற்றுக் கொண்டேன்.

சினிமா ஆசை:

சினிமா ஆசை:

அப்பா அம்மா பிறந்தது மேற்குவங்க மாநிலத்தில். நான் பிறந்தது குஜராத் மாநிலத்தில். படித்தது கர்நாடகாவில், இப்போ வாழ்வது தமிழ் நாட்டில். ஆக இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பது என் ஆசை. அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர் .அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து இப்போது எனக்குத் துணையாக படப்பிடிப்புகளுக்கு வருகிறார்.

நல்ல நடிகை:

நல்ல நடிகை:

நானும் சாப்ட்வேர் இன்ஜீனியர் தான். 2015 ல் இந்திய அளவில் எல்லா மாநில அழகிகளும் கலந்து கொண்ட அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறேன். நான் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும்.

விஜய்யின் டான்ஸ்:

விஜய்யின் டான்ஸ்:

சித்தார்த்தை ரொம்ப பிடிக்கும். நடிகர் விஜய்யின் டான்ஸை விரும்பி ரசிப்பேன். அடுத்து நான் நடித்துக் கொண்டிருக்கும் "கருத்துக்களை பதிவு செய் " எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X