முத்தக்காட்சியில் நடித்தேன்.. இந்த வேலைய என்கிட்ட வச்சுக்காதே.. ரீஹானாவை விளாசிய நடிகை!

சென்னை: சர்ச்சைக்கு பெயர் போன நடிகையான ரீஹானா தற்போது youtube சேனல்களில் பல்வேறு நடிகை நடிகர்களை பேட்டி எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் டிராபிக் ராமசாமி என்ற படத்தில் நடித்த நேத்ரா ஸ்ரீ என்பவரை பேட்டி எடுத்தார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

சீரியல் மற்றும் படங்களில் நடித்து வந்த நடிகை ரீஹானா தற்போது சிலர் யூடியூப் சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.தற்போது, இவர் Reflect Prime என்ற சேனலுக்காக, நடிகை நேத்ரா ஸ்ரீ என்பவரை பேட்டி எடுத்தார். அப்போது நேத்ரா ஸ்ரீ தாமதமாக வந்ததால், ரீஹானா அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஒரு நடிகையாக இருந்து கொண்டு சொன்ன நேரத்திற்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் என்ன நடிகை என கேள்வி எழுப்பினார்.

traffic ramasamy reehana nethra shri

ரீஹானா பேட்டி: அதுவரை அமைதியாக இருந்த நேத்ரா, தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தாமதமாக வந்ததாகவும் இதுகுறித்து ஏற்கனவே நிகழ்ச்சியின் தயாரிப்பாளரிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். அவர் பலமுறை எடுத்துக் கூறியும் ரீஹானா,தொடர்ந்து அதே கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான நேத்ரா இந்த நிகழ்ச்சியே எனக்கு வேண்டாம் நான் பேட்டியை கொடுக்கவில்லை என்று எழுந்து செல்ல, ரீஹானா என்னடா நடக்கிறது என்று யோசித்துக்கொண்டு இருக்க அந்த நடிகை இது பிராங்க், வழக்கமாக, நீங்க தான் அனைவரையும், பிராங்க் செய்வீர்கள் இன்னைக்கு நான் செய்தேன் என்ற ரீஹானாவுக்கு ஷாக் கொடுத்தார்.

முத்தக்காட்சியில் நடித்தேன்: இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட நடிகை சரி வாங்க நிகழ்ச்சிக்குள் போகலாம் என்று, டிராபிக் ராமசாமி படத்தில் காவல் நிலையத்தில் வரும் அந்த விவகாரமான காட்சியில் நடித்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், அந்த படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்கும் என்று எனக்கு முன்பே சொல்லவில்லை. அந்த படத்தில் இரண்டு காட்சியில் நடித்த பிறகு தான், அந்த முத்தக்காட்சியில் நடிக்க சொன்னார்கள். அப்போது நான் முடியாது என்று சொல்லி இருந்தால் அந்த படப்பிடிப்பு நின்று இருக்கும் அதனால்தான் அந்த காட்சியில் நடித்தேன், நீங்கள் அந்த சூழ்நிலையில் இருந்தாலும் அப்படித்தான் நடித்து இருப்பீர்கள் என்றார்.

முகம் சுளிக்கும் காட்சி: நடிகைகள் இது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என்றும் முடிவு எடுத்து விட்டால் எப்போதும் அது போன்ற காட்சிகளில் நடிக்க கூடாது. உங்களுக்கு புகழ் வர வேண்டும் என்பதற்காக முகம் சுளிக்க வைக்கும் காட்சியில் நடித்து இருக்கிறீர்கள் என்று ரீஹானா கேள்விகள் எழுப்பினார். இந்த கேள்வியால் கடுப்பான நேத்ரா ஸ்ரீ, இது வரைக்கும் யாரும் முகம் சுளிக்கும் காட்சி என்று சொல்லவே இல்லை நீங்கள் மட்டும்தான். இப்படி சொல்லி இருக்கிறீர்கள். டிராபிக் ராமசாமி என்ற மனிதர், எந்த மாதிரியான பிரச்சனை சந்தித்தார், எப்படி பல விஷயங்களை கடந்து வந்தார் என்கிற உண்மை சம்பவத்தை தான் படம் சொல்லி இருக்கிறது. இதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருந்தால், வேலைக்கு ஆகாது என்று நடிகை நேத்ரா ஸ்ரீ அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X