விஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்!
Recommended Video

சென்னை : சமூக நோக்கத்துக்காக போராடி வரும் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'டிராஃபிக் ராமசாமி' படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமியாக நடித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவி இயக்குநரான விக்கி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சீமான், குஷ்பு, பிரகாஷ் ராஜ், விஜய் ஆண்டனி ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

'டிராஃபிக் ராமசாமி' படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தின் டீசரை சமீபத்தில் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டார். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், படத்தை ஜூன் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டு மூன்று தேதிகளை தயாரிப்பாளர் சங்கத்திற்கு தெரிவித்தனர் தயாரிப்புக் குழுவினர். தயாரிப்பாளர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தல் குழு ஜூன் 22-ம் தேதி ரிலீஸ் செய்துகொள்ள அனுமதித்துள்ளது.
ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாள். விஜய் பிறந்தநாள் அன்றே அவரது அப்பா நடித்திருக்கும் 'டிராஃபிக் ராமசாமி' படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாளன்று வெளியாகும் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











