மயில்சாமி இறந்த பிறகு மகனுக்கு ஏற்பட்ட நிலைமை இதுவா?.. என்னங்க இது?.. ரொம்ப கொடுமைங்க
சென்னை: மயில்சாமி தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதது. ஏகப்பட்ட திறமைகளை கைவசம் வைத்திருந்த பலருக்கு உதவிகளை செய்திருக்கிறார். அதன் காரணமாகவே அவரை பலரும் மதிப்பார்கள். சூழல் இப்படி இருக்க கடந்த 2023ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. இந்நிலையில் அவரின் மகன் அன்பு சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து நகைச்சுவையில் அதகளம் செய்தவர் மயில்சாமி. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல குரல் மன்னனாகவும் திகழ்ந்தவர். அதோடு மட்டுமில்லாமல் காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியவர் மயில்சாமி. நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதர் என்ற பெயர் எடுத்தவர்
உயிரிழந்த மயில்சாமி: தீவிர சிவபக்தரான மயில்சாமி கடந்த 2023ஆம் ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் விழித்திருந்தார். அப்போது அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அதனையடுத்து அவரது உடலானது வடபழனியில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உயிரிழப்பு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் தள்ளியிருக்கிறது.
உதவி என்றாலே மயில்சாமிதான்: சினிமாவில் நடிப்பவர்களில் சிலர் உதவி செய்யாமலும்; சிலர் உதவி செய்தும் கொண்டிருப்பார்கள். ஆனால் உதவி செய்வதையே தனது இன்னொரு தொழிலாக வைத்திருந்தவர் மயில்சாமி. தன்னிடம் இருக்கும் பணத்தில் பெரும்பாலும் மற்றவர்களுக்காக செலவழிப்பவர் மயில். அப்படி அவர் செய்த உதவிகள் குறித்து ஏராளமானோர் மயில்சாமி இறந்த பிறகு வெளிப்படுத்தயது குறிப்பிடத்தக்கது.

மகன்கள்: மயில்சாமிக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களும் சினிமாவில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு போராடிவருகின்றனர். மயில்சாமி இறந்த பிறகு நடந்த நினைவேந்தல் நிகழ்வில்கூட அப்பாவின் ஆசீர்வாதத்தோடும், உங்களின் அன்போடும் நாங்கள் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்போம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படி இருக்க அவரது மகன்களில் ஒருவரான அன்பு, எமன் கட்டளை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
அன்பு சொன்ன விஷயம்: இந்நிலையில் அந்தப் படத்தின் நிகழ்ச்சி இன்று நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய அப்பா பலருக்கு உதவி செய்திருக்கிறார். அவரிடம் பணம் இல்லையென்றால் கடன் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவி செய்தவர். அவர் மறைந்த பிறகு நான் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் தேடினேன். ஆனால் யாருமே எனக்கு உதவவில்லை. பல இயக்குநர்கள், நடிகர்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.
அப்படியா என கேட்பார்கள்: அவர்களை எப்போதேனும் நேரில் சந்தித்தால், 'என்னை பார்க்க முயற்சி செய்தீர்களா?.. எனக்கு தெரியவே தெரியாதே என்றுதான் சொன்னார்கள். இவர்கள் மட்டுமின்றி அப்பாவுடைய நண்பர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை. சினிமாவில் இப்போது இருப்பவர்கள்; சினிமாவில் இருந்தவர்களின் வாரிசுகளுக்கு உதவ வேண்டும். நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். அப்பாவோடும் நடிக்க நான் முயற்சி செய்தேன். ஆனால், கடைசி வரை என்னோடு நடிப்பதில்லை என்பதில் தீவிரமாக இருந்தார் அப்பா" என்று கூறியுள்ளார். மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் இவ்வாறு தெரிவித்துள்ளது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











