Airaa Trailer: தெளிவாக கதை சொல்லும் ஐரா டிரெய்லர்... இதையெல்லாம் கவனிச்சீங்களா!

சென்னை: நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா படத்தின் டிரெய்லரிலேயே, படத்தின் கதை நமக்கு தெளிவாகிறது.

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஐரா. இதில் அவருடன், கலையரசன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் ஐரா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை பார்க்கும் போது, படத்தின் கதை இதுதான் என யூகிக்க முடிகிறது.

யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

நயன்தாராவும், யோகி பாபுவும் ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார்கள். மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி, சேனலை பிரபலப்படுத்த நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி, இல்லாத பேயை இருப்பது போல் காட்டுவது.

பவானியின் பிளாஷ்பேக்

பவானியின் பிளாஷ்பேக்

இதில் எதிர்பாராதவிதமாக பிரச்சினையில் சிக்குகிறார் நயன்தாரா. பிளாஷ் பேக்கில் வரும் கருப்பு நயன்தாரா பவானி, பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கிறார். இந்த பிரச்சினை மாடர்ன் நயன்தாரா எப்படி சுபமாக முடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

அமுதனாக கலையரசன்

அமுதனாக கலையரசன்

இதில் பிளாஷ்பேக்கில் வரும் நயன்தாராவுக்கு ஜோடியாக கலையரசன் அமுதல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பவானிக்கு, பெண் குழந்தை பிறக்கிறது. இதனால் அவரும் அந்த குழந்தையும் வில்லன்களால் கொலை செய்யப்படுகிறார்கள்.

பழிவாங்கும் படலம்

பழிவாங்கும் படலம்

டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனத்தின் மூலம், அமுதன் தனக்கு கொடுத்த சந்தோஷத்தை அழித்தவர்களை பழிவாங்கே பவானி துடிக்கிறார் என்பது தெரியவருகிறது. மாடர்ன் நயன்தாரா, பவானியை சாந்தப்படுத்திகிறாரா அல்லது அவருக்கு உதவி வில்லன்களை பழிவாங்குகிறாரா என்பது படம் வெளியாகும் போது தெரியவரும்.

இடையிடையே பறக்கும் பட்டாம்பூச்சி

இடையிடையே பறக்கும் பட்டாம்பூச்சி

டிரெய்லரின் ஆரம்பத்தில் இருந்து, இடையிடையே ஒரு பட்டாம் பூச்சியை காட்டுகின்றனர். எனவே அதற்கு ஏதாவது காரணம் , இருக்கும் என்றே தெரிகிறுது. மேலும், யூடியூப் சேனல் நடத்துபவர்கள், புளூ சட்டை மாறன், உள்ளிட்டோரை செமையாக கலாய்த்திருக்கிறார்கள். படம் வெளியானதும் அவர்களுடைய ரியாக்ஷன் தெரியவரும்.

சமூகத்துக்கு கருத்து

தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்து நயன்தாரா நடித்து வருகிறார். பிறகு நிச்சயமாக இப்படம் பேய் பழிவாங்கும் படலம் என்ற பழைய டெம்ப்லேட்டுக்குள் சிக்காது என நம்பலாம். அதோடு, சமீபகாலமாக, தனது படங்களில் மறைமுகமாக, சமூகத்திற்கு ஒரு கருத்து தெரிவிப்பதையும் நயன்தாரா கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் இந்த படம், பெண் சிசு கொலைக்கு எதிரானதாக இருக்கம் என தெரிகிறுது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X