அந்த சூப்பர் ஹிட் படமும் இருக்காம்.. டொரன்டோ திரைப்பட விழாவில் நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் படம்!

By

கொச்சி: நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள படம், டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

நடிகை, நஸ்ரியா நடித்துள்ள மலையாள படம் 'டிரான்ஸ்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை அன்வர் ரஷித் இயக்கி இருந்தார்.

திருமணத்துக்குப் பிறகு நஸ்ரியாவும் அவர் கணவர் பகத் பாசிலும் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கவுதம் மேனன்

கவுதம் மேனன்

பகத் பாசில், இந்தப் படத்தில், நம்பிக்கை அளிக்கக் கூடிய பேச்சாளராக நடித்துள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கும் கதை, கேரளா சென்று பிறகு மும்பைக்கு பயணிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமானார். இதில் அவர் நடிப்பு பேசப்பட்டது.

திரைப்பட விழா

திரைப்பட விழா

இயக்குனர் அன்வர் ரஷித் சிலருடன் இணைந்து தயாரித்திருந்தார். இந்தப் படம் டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்தத் திரைப்பட விழா இந்த கொரோனா காலத்திலும் தொடர்ந்து நடக்க இருக்கிறது. இந்த மாதம் 9 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரை டொரன்டோவில் இந்த விழா நடக்கிறது. வரும் 13 ஆம் தேதி டிரான்ஸ் படம் திரையிடப்பட இருக்கிறது.

கார்த்தியின் கைதி

கார்த்தியின் கைதி

இந்தப் படத்துடன் கார்த்தியின் கைதி, நானி நடித்த தெலுங்கு படமான ஜெர்ஸி, ஹிர்த்திக் ரோஷன் நடித்து பரபரப்பாகப் பேசப்பட்ட சூப்பர் 30 ஆகிய படங்களும் அங்கு திரையிடப்பட இருக்கின்றன. கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கார்த்திக்குடன், நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடிந்திருந்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

ஹிர்த்திக்கின் சூப்பர் 30

ஹிர்த்திக்கின் சூப்பர் 30

தமிழில், சூப்பர் ஹிட்டான கைதி படம், இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. ஹிர்த்திக் ரோஷனின் சூப்பர் 30 படம், பயோபிக் ஆகும். பீகாரைச் சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு சூப்பர் 30 என்ற திட்டம் மூலம் இலவசமாக கல்வி பயிற்சி அளித்து ஐடிடி - ஜேஇஇ தேர்வுகளுக்கு தயார் செய்துவருகிறார். அவர் வாழ்க்கையை மையமாக கொண்ட படம் இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X