இவங்களும் கன்ஃபார்மாம்.. பிக் பாஸ் சீசன் 5ல் கலக்கப் போகும் திருநங்கை நமிதா மாரிமுத்து!
சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாக உள்ளது.
சமீபத்தில் கல்யாண கலாட்டா டீசருடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசிய புரொமோ வீடியோ வேற லெவலில் வைரலானது.
தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5ல் யாரெல்லாம் கலந்து கொள்கின்றனர் என்கிற கன்ஃபார்ம் லிஸ்ட் கொஞ்சம் கொஞ்சமாக கசிய ஆரம்பித்துள்ளது. திருநங்கை நமிதா மாரிமுத்துவும் இந்த சீசனில் உள்ளே நுழைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த சீசன் ஆரம்பம்
பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ வெற்றிகரமாக 4 சீசன்களை முடித்த நிலையில், அடுத்த சீசனுக்கான வேலைகள் முழு மூச்சில் ஆரம்பமாகி விட்டன. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் சம்மரில் அதிகரித்த நிலையில், அக்டோபர் மாதத்திற்கு நிகழ்ச்சி தள்ளிப் போனது.

ஆண்டவரின் ஆட்டம்
இந்தியில் சல்மான் கான் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறாரோ அதே போல தமிழில் முதல் சீசனில் ஆரம்பித்த கமல்ஹாசன் ஐந்தாவது சீசனிலும் தனது அதிரடியை ஆரம்பிக்க காத்திருக்கிறார். கமல்ஹாசனின் டபுள் மீனிங் வசனங்கள் போன சீசனில் மிகப்பெரிய அளவில் களைகட்டிய நிலையில், இந்த சீசனில் ஆண்டவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

போட்டியாளர்கள் பரிதாபங்கள்
பிக் பாஸ் வீட்டிற்குள் புதிதாக குடிபோகப் போறது யாரு? குழாயடி சண்டை போடப் போகிறது யாரு? நரி முகத்தை காட்டப் போவது யாரு? ட்ரோல்களில் சிக்கி சின்னாபின்னமாவப் போவது யாரு? என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏகப்பட்ட கெஸ்சிங் போட்டியாளர்களின் பெயர்களும் வெளியாகி உள்ளன. சிலர் நாங்களாம் வரலைங்க நம்பாதீங்க என உஷார் படுத்தி உள்ளனர். சில பெயர்கள் கன்ஃபார்ம் லிஸ்ட்டுக்கும் சென்றிருக்கிறது.

முதன்முறையாக
சென்னையை சேர்ந்த பிரபல திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முதன்முறையாக திருநங்கை போட்டியாளர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்பதே சந்தோஷமான விஷயம் தான்.
Recommended Video

நமிதா மாரிமுத்து
கடந்த சீசனில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளரை இறக்கி மிகப்பெரிய வெற்றியை கண்ட நிலையில், இந்த முறை பிக் பாஸ் தமிழில் மாடல் அழகி நமிதா மாரிமுத்துவை களமிறக்க எண்ட்மோல் ஷைன் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஷகீலாவின் வளர்ப்பு மகளான திருநங்கை மிலாவும் இந்த சீசனில் கலந்து கொள்வது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

உலக அழகிப் போட்டி
மாடல் துறையில் ஆர்வம் ஏற்பட்ட சென்னையை சேர்ந்த நமிதா மாரிமுத்து 2014ல் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வின் பண்ணியுள்ளார். 2015ல் மிஸ் கூவாகம், 2018ல் மிஸ் இந்தியா என கலக்கிய இவர், சமீபத்தில் சர்வதேச அளவில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டார்.

கன்ஃபார்ம் லிஸ்ட்
ஷகிலாவின் மகள் மிலா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவை தொடர்ந்து நமிதா மாரிமுத்துவும் கன்ஃபார்ம் லிஸ்ட்டில் இணைந்துள்ளார். மேலும், ஜிபி முத்து உள்ளிட்ட பிரபலங்களும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை என அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications