பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டார்.. நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார்!

சென்னை: சின்னத்திரை நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தி என்னை ஏமாற்றிவிட்டதாக அவர் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக பெண் கெட்டப்பில் பல நிகழ்ச்சிகளில் தோன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நாஞ்சில் விஜயன். இவர், 2023 ஆம் ஆண்டு மரியா என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

Nanjil Vijayan transgender

ஏமாற்றிவிட்டார்: இந்நிலையில், திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், கடந்த 15 ஆண்டுகளாக விய் டிவியில் பணியாற்றி வருவதாகவும், அதில் கடந்த 5 வருடங்களாக நானும் நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி இருந்தார். ஆனால், பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டதாக தனது வழக்கறிஞருடன் வந்து புகார் அளித்துள்ளார்.

காதலித்தோம்: இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை, நான் வில்லிவாக்கம் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தேன். அந்த வீட்டிற்கு நாஞ்சில் விஜயன் எப்போதும் வந்து செல்வார். நாங்கள் இருவரும் காதலிப்பது அவர்களுடைய குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும். அவருக்கு திருமணமாவதற்கு முன்பு வரை, அவரின் குடும்பத்தினர் என்னிடம் நன்றாகத்தான் பேசி வந்தார்கள். ஆனால், நாஞ்சில் விஜயனுக்கு திருமணமானதும், என்னிடம் யாருமே பேசுவது இல்லை. என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

வேதனையாக இருக்கு: திருமணமான பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் நாங்கள் இருவரும் ரெசாட் போய் இருந்தோம். அதன் பின் திடீரென ஒரு நாள், வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது. குழந்தை இருக்கிறது. அதற்கு மேல் நாம் பழக வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால், நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்ப்டடு இருக்கிறது. நான் திருநங்கை என்பதை தெரிந்துதான், என்னை காதலித்தார். ஆனால், இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டு ஒதுக்கும்போது மனம் மிகவும் வேதனை அடைகிறது என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X