Vijay: நாங்க 9-ஆடா? என்ன விஜய் அண்ணா இது? விஜய்யை வெளுத்து வாங்கிய திருநங்கை!

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி கடந்த ஆண்டு தொடங்கி இருந்தாலும், தனது கட்சியின் முதலாம் ஆண்டு விழாவில் இருந்து செம சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். இப்படியான நிலையில் தனது கட்சியின் கட்டமைப்பு பணிகளில் கவனம் செலுத்தும் விஜய்யின் செயல் திருநர் சமூக மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஜய்க்கு தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார், திருநர் சமூக செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா. இது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆனாலும், அவரிடம் இருந்து இன்னும் ஆக்டிவ் பாலிடிக்ஸ் என்பது வெளிப்படாமலே இருக்கிறது. கட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகியுள்ளதால், தனது கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படியான நிலையில் தவெகவில், ஊராட்சி அளவில் தொடங்கி, மாவட்ட அளவில் என்னென்ன கட்டமைப்புகளும் அணிகளும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Living Smile Vidhya TVK Vijay Vijay

அதில் தொழில்நுட்பத்துறை அணியில் தொடங்கி, வழக்கறிஞர்கள் அணி, தொண்டர்களை உருவாக்கும் அணி உள்ளிட அணிகள் இடம்பெற்றுள்ளது. அதில் திருநர்களுக்கான அணியும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு, அறிக்கை இணையத்தில் உலா வருகிறது. திருநர் அணியை வரிசை எண் 9 இல் தவெக வரிசைப்படுத்தி உள்ளது, இது தொடர்பாக திருநர் சமூக செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்க்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இழிவு: அதாவது இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்தான்டா இந்த "9" என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவிகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்! " என பதிவிட்டுள்ளார்.

மன்னிப்பு: இவரது இந்த பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் அரசியல் களத்தில் விஜய் அல்லது அவரது கட்சியினரோ எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் அதை மிகவும் ஆராய்ந்து கவனத்துடன் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை கூறி வருகின்றனர். அதே நேரத்தில் லிவிங் ஸ்மைல் வித்யாவின் இந்த பதிவுக்கு சில தவெக இணையவாசிகள் இது தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர். அதாவது, ஒருவர், " காயப்படுத்தும் எண்ணத்தோடு இது கட்டாயம் நடந்திருக்காது, இது கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது மன்னிக்கவும் 🙏🙏 இது போல இனி ஏற்படாது" எனவும் மற்றொருவர், "இது நிச்சயமாக வேண்டும் என்று நடந்திருக்காது. உங்களை காயப்படுத்தியிருந்தால் மனதார மன்னிப்பு கோருகிறேன். அதிகாரப்பூர்வமாக தவெக தலைவர் திரு.விஜய் அவர்களால் வெளியிடும் அறிக்கையில் நிச்சயமாக மாற்றப்படும். நன்றி" என தவெகவினர் மன்னிப்பும் கோரினர்.

ரக்குறைவான விமர்சனம்: இதற்கு, லிவிங் ஸ்மைல் வித்யா, " விளக்கத்திற்கு மிக்க நன்றி . வணங்குகிறேன். அதேவேளையில் தொடர்ந்து என்னை தரக்குறைவாக பேசும் கட்சி தொண்டர்களிடம் கண்ணியமாக விமர்சிக்க சொல்லவும். புரிதலுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார். லிவிங் ஸ்மைல் வித்யாவின் இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் அவர் குறிப்பிட்டதைப் போல, அவரது எக்ஸ் தள பதிவுக்கு தவெகவினர் சிலர், விஜய் ரசிகர்கள் சிலர் திருநங்கை வித்யாவை தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: tvk vijay vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X