அந்த பிரபல இயக்குநர் என்னை நிர்வாணமாக நிற்க சொன்னார்.. திருநங்கை சாமுண்டி மலைகா பகீர்!

சென்னை: வந்தா மலை, ஆள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள திருநங்கை சாமுண்டி மலைகா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமாவே வேண்டாம் என தான் ஒதுங்க காரணமே பிரபல இயக்குநர் பார்த்த வேலை தான் என பகீர் கிளப்பியுள்ளார். சினிமாவில் மட்டுமின்றி அனைத்து பணியிடங்களிலும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நிரம்பி வழிகின்றன.

கல்வி கற்றால் மனிதன் அறிவாளியாக மாறுவான், அடுத்தவனுக்கு உதவுவான் என்கிற காலம் எல்லாம் மலையேறி போய் நிறைய படித்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் தான் அப்பாவியாக புதிதாக பணியிடங்களில் சம்பளத்துக்காகவும் தங்கள் கனவை நனவாக்க வருபவர்களையும் அட்ஜெஸ்ட்மெண்ட் என்கிற பெயரால் பலியிடுவதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

adjustment casting couch

2011ம் ஆண்டே சர்வதேச அளவில் மாடலிங் துறையில் அசத்திய திருநங்கையாக மாறிய சாமுண்டி மலைகா சினிமாவில் நல்ல நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டாலும் பாலியல் தொல்லை பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஃபேஷன் துறையில் மட்டுமே இயங்கி வருவதாக கூறியுள்ளார்.

ரொம்ப மோசமா இருக்கு: ஃபேஷன் துறையில் பல ஓரினச்சேர்க்கையாளர்கள் தலைமையில் இருப்பதால் தான் அந்த துறை பெரிதும் மோசம் அடையாமல் உள்ளது. ஆண்கள் எங்கள் துறையில் இருந்தால் இந்நேரம் ஃபேஷன் துறையே நாறி போயிருக்கும். ஆனால், சினிமா துறை ரொம்பவே சீர் கெட்டு மோசமான நிலையில் உள்ளது என சாமுண்டி மலைகா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சில்க் மாதிரி ஆக ஆசைப்பட்டேன்: சிறு வயதில் இருந்தே சினிமா மீது ரொம்பவே ஆர்வம். நடிக்க ரொம்பவே பிடிக்கும். சில்க் ஸ்மிதாவை பார்த்து அப்படியே ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் கால்ஷீட் கூட கிடைக்கும் சில்க் ஸ்மிதா கால்ஷீட் கிடைக்காது என்கிற நிலை இருந்தது. ஆனால், அவரது மரணத்தின் போது யாருமே அவரை கண்டுக் கொள்ளவில்லை.

சின்மயி சொல்லும் போது கேட்கல: தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து பாடகி சின்மயி சொல்லும் போது யாருமே காது கொடுத்து கேட்கவில்லை. இங்குள்ள முன்னணி நடிகைகள் இப்போ பேசுவது போல அப்போது அவருக்கு யாருமே சப்போர்ட் பண்ணல. சின்மயிக்குத்தான் தப்பான பட்டம் கட்டினார்கள். மலையாளத்தில் ஒரு நடிகை துணிச்சலாக பேசிய நிலையில், அவருக்கு அரசாங்கமே ஆதரவு கொடுத்த நிலையில் தான் இன்று ஹேமா குழுவின் அறிக்கை மலையாள திரையுலகையே ஆட்டம் காண வைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

நிர்வாணமாக நிற்க சொன்ன இயக்குநர்: ஒரு பிரபல இயக்குநர் அவர் பேரு சொல்லலாமா என்று கூட தெரியவில்லை. சொல்லவும் விரும்பவில்லை. வந்தா மலை, ஆள் உள்ளிட்ட படங்களில் நடித்த பிறகு அவரது படத்தில் நடிக்க அழைத்தார். நானும் சென்றேன். உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நில்லு, உன்னை அப்படி பார்க்கணும்னு சொன்னாரு.. அதன் பிறகு இந்த சினிமாவில் நடிக்கவே வேண்டாம் என முடிவு செய்து விலகி விட்டேன் என திருநங்கை சாமுண்டி மலைகா தனக்கு நடந்த கசப்பான காஸ்டிங் கவுச் பற்றி வெளிப்படையாக அந்த பேட்டியில் கூறியுள்ளார். பெண்கள் வெளிப்படையாக பேசாத வரை இந்த குற்றங்கள் நடந்துக் கொண்டே இருக்கும். பெண்கள் பேசினால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும் என்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X