பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் திருநங்கை ஷிவின் கணேசன்..யார் இவர் தெரிஞ்சுக்கலாமா?

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை என்ட்ரி கொடுக்க உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 இன்று மாலை 6 மணிக்கு ஆட்டம் பாட்டத்துடன் மிகவும் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்துவைப்பார்.

இன்றிலிருந்து அடுத்த 100 நாட்களுக்கு தொலைக்காட்சி பிரியர்களுக்கு செம எஞ்சாய்மென்ட் காத்திருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் முந்ததைய சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளர். அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாச முயற்சியாக பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

ஷிவின் கணேசன்

ஷிவின் கணேசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விவரம் குறித்த தகவல் கசிந்து வரும் நிலையில், இந்த சீசனில் திருநங்கை ஷிவின் கணேசன் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் வீட்டுக்கு ஒரே பையன். இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார்.

வீட்டைவிட்டு வெளியேறி

வீட்டைவிட்டு வெளியேறி

அங்கு மாடலாக மாறிய ஷிவின் கணேசன் சில ஆண்டுகள் சிங்கபூரிலேயே மாடலாக இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால், இவர் திரும்பி வந்த போதும் அவருடைய பெற்றோர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கடந்த முறை நமிதா மாரிமுத்து கலந்து கொண்டு நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

இப்போதே ரசிகர்கள்

இப்போதே ரசிகர்கள்

திருநங்கை ஷிவின் கணேசன் பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்வது உறுதியாகி விட்டதால், ஷிவின் கணேசனின் இன்ஸ்டாகிராம் கணக்கு பக்கம் சென்று அவரின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து வருகிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள். ஷிவினை பிக் பாஸ் வீட்டில் அழ வைக்காமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X