இனிமேல் செருப்பாலதான் அடிப்பேன்.. கையில் செருப்போடு நாஞ்சில் விஜயனை மிரட்டிய விஜே வைஷ்ணவி!

சென்னை: காமெடி நாஞ்சில் விஜயனுக்கும், திருநங்கை விஜே வைஷ்ணவிக்கும் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, என் பணத்தையும் வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்று நாஞ்சில் விஜயன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைஷ்ணவி புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

நாஞ்சில் விஜயன் - வைஷ்ணவி: விஜே வைஷ்ணவி மற்றும் நாஞ்சில் விஜயனுக்கும் ஆரம்பத்தில் நல்ல நட்பு இருந்து, அது பின்னர் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையாக மாறியதாகக் கூறப்படுகிறது. வைஷ்ணவி நாஞ்சில் விஜயனுக்குப் பல வழிகளில் பண உதவிகள் செய்ததாகவும், ஆனால் நாஞ்சில் விஜயன் தனக்குத் திருமணம் ஆனவுடன் வைஷ்ணவியை மொத்தமாகத் தவிர்த்தது மட்டுமில்லாமல் வாங்கிய பணத்தையும் ஏமாற்றியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். பின் அந்த புகாரை அவர் வாபஸ் பெற்றார்.

Nanjil Vijayan VJ Vaishu instagram VJ
Photo Credit:

கையில் செருப்புடன்: இந்நிலையில், விஜே வைஷ்ணவி தனது இன்ஸ்டாகிராமில், கையில் செருப்பை வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், இந்த செருப்பு யாருக்குன்னு தெரியுமா? நாஞ்சில் விஜயனுக்குத்தான். நாஞ்சில் விஜயனோட ஆதரவாளர்கள் என் கமெண்ட் பாக்ஸ்ல வந்து ரொம்ப அசிங்க அசிங்கமா கமெண்ட் பண்றாங்க. நீ எல்லாம் உயிரோடவே இருக்கக் கூடாது, செத்துப் போயிடுனு சொல்றாங்க. நான் செத்துப் போனாலும் அவர்தான் ஜெயிலுக்குப் போவாரு. நான் எந்தத் தப்பும் பண்ணலை. எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்ததுங்கிறது எனக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் மட்டும்தான் தெரியும். அதை நாங்க பேசி முடிச்சுப்போம்.

Nanjil Vijayan VJ Vaishu instagram VJ
Photo Credit:

செருப்பால அடிப்பேன்: அவனுக்கு மட்டும்தான் குடும்பம் இருக்கா? எனக்கு குடும்பம் இல்லையா? அவன் மட்டும்தான் நல்லா வாழணுமா? எப்போ பாத்தாலும் என்னைப்பத்தி அவதூறா கமெண்ட் போடுற உங்களைப் போன்ற ஆட்களை இனிமேல் நான் செருப்பாலதான் அடிப்பேன். சூர்யா தேவி விவகாரத்தில் நாஞ்சில் விஜயனும், சூர்யா தேவியும் என் பெயரை இழுத்தாங்க, அதன் பின் தான் மீண்டும் நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்தேன். இந்த விவகாரத்தை நான் சட்டரீதியா பார்த்துக்கிறேன். என் குடும்பத்தைப் பத்தியும், நான் ஒரு திருநங்கைங்கிறதையும் வச்சு ரொம்ப மோசமா விமர்சனம் பண்ணின நாஞ்சில் விஜயனுக்கு இனி என் மனசுல இடமே இல்லை. நான் என் வாழ்க்கையை நிம்மதியா வாழணும்னு ஆசைப்படுறேன் என்று வைஷ்ணவி பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X