சங்கீதா அகதியா? கண்ணகிடா.. இத்தோட நிறுத்திக்கோங்க.. விஜய் ஏன் வாய் திறக்கல? விளாசி விட்ட இலங்கை தமிழர்
சென்னை: விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய்யின் மனைவி சங்கீதாவை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது ஜெர்மனியில் உள்ள புலம்பெயர் இலங்கைத் தமிழரும் எழுத்தாளருமான சங்கீதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் விஜய் ரசிகர்களை விளாசி விட்டுள்ளார்.
இது தொடர்பாக தனுஜா வெளியிட்டுள்ள வீடியோவில், " முதலில் சங்கீதா இது போல விவாகரத்திற்கு விண்ணப்பித்தாரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் வாய் திறக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்கட்டும், சங்கீதா விவாகரத்து கேட்டுள்ளார் என்றதும் விஜய் ரசிகர்கள் பலரும் சங்கீதாவை தனிமனித தாக்குதல் நடத்துகுறீர்கள், அகதி என்று கூறுகிறீர்கள், பெண் என்ற காரணத்தால் மிகவும் மோசமாக எல்லாம் விமர்சிக்கிறீர்கள்.

கண்ணகி: சங்கீதா தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்று குற்றம் சுமத்துகிறார் என்றால், சிலப்பதிகாரம் கண்ட தமிழ்நாடு, பாதிக்கப்பட்ட பெண் என்ன சொல்கிறார் என்று காது கொடுத்து கேட்க வேண்டும் அல்லவா. கண்ணகி போல வாழ்ந்த சங்கீதாவை விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறீர்கள். இத்தனை நாட்களாக விஜய்யின் மனைவியாக கடந்த 28 ஆண்டுகளாக இருந்த சங்கீதாவை மிகவும் மோசமாக விமர்சிக்கிறீர்கள். இது சரியல்ல. சங்கீதாவை மோசமாக விமர்சிக்கிறீர்கள் என்றால் அது விஜய்யை மோசமாக விமர்சிப்பதை போலத்தானே? நாளைக்கு இது எல்லாம் ஃபேக் நியூஸ் என்று சொன்னால் நீங்கள் முகத்தை கொண்டு போய் எங்கு வைப்பீர்கள்.
சங்கீதா பணக்காரி: அதேபோல் விஜய் ஏதோ சாதாரண ஏழை ரசிகையை திருமணம் செய்து கொள்ளவில்லை. விஜய்யும் சங்கீதாவும் சந்திக்கும் போதே சங்கீதா ஒரு விஜபி தான், அது மட்டும் இல்லாமல் ஒரு பணக்கார வீட்டுப் பெண் தான். அப்படி இருக்கையில் விஜய் ஏதோ சாதாரண ஏழை பெண்ணை தனது ரசிகையை திருமணம் செய்து கொண்டார் என்று எல்லாம் சொல்ல வேண்டாம். திருமணம் நடைபெற்ற போது விஜய்யை விட கூடுதலாக பணம் வைத்திருந்தார்.
நேர்மையான வாழ்க்கைக்கு அநீதி: சங்கீதா எங்குமே தனது பணம், படிப்பு போன்றவற்றை வெளிக்காட்டி பந்தா காட்டியவர் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தன்னை ஒரு இலங்கை தமிழச்சி என்று சொன்னதில்லை. அவரும் அவரது வேலையுமாகவே இருந்துள்ளார். இத்தனை ஆண்டுகள் நேர்மையாக வாழ்ந்த தனக்கு அநீதி நடைபெற்றுள்ளது என்று குற்றச்சாட்டை முன் வைக்கும்போது, சங்கீதாவுக்கு காது கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவரையும் அவர் சார்ந்த இலங்கை தமிழர் இனத்தையும் இலங்கை தமிழ் மண்ணையும் மோசமாக விமர்சிப்பது தவறு மற்றும் நாகரீகமற்ற செயல்.

வேதனை: சங்கீதா தவறு செய்தால் தவறை சுட்டிக் காட்டுங்கள், ஆனால் எந்த இடத்திலும் நீங்கள் இழிவு படுத்தும் அளவுக்கு கேவலமான ஆள் கிடையாது. எந்த ஒரு தமிழ் பெண்ணும் தனது கணவர் இன்னொரு பெண்ணோடோ, நடிகையோடோ சுற்றினால் வேதனையை வெளிப்படுத்த தான் செய்வார். தன் மானம் உள்ள தமிழ் பெண் அந்த கணவனே வேண்டாம் என்றுதான் கூறுவார். சங்கீதா எங்களின் அக்கா, எங்கள் அக்காவை இழிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார். இவரது இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











