கேவலமாக சித்தரிக்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.. திருநங்கைகள் போலீஸில் புகார்!

By Vignesh Selvaraj

Recommended Video

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிராக திருநங்கைகள் போலீஸில் புகார்- வீடியோ

சென்னை : 'ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அடல்ட் படத்திற்கு திரையுலகினர் மத்தியிலேயே எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.

இயக்குநர் பாரதிராஜா, விஜய் மில்டன் ஆகியோர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தைக் கடுமையாகச் சாடியிருந்தனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இந்தப் படத்தை உடனடியாக தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி நீண்ட கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Transgenders blasts Iruttu araiyil murattu kuththu movie

இந்நிலையில் திருநங்கைகள் இப்படத்தில் தங்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் கூறி போலீஸில் புகார் அளித்துள்ளனர். சென்னை தோஸ்த் என்ற அமைப்பைச் சேர்ந்த அப்சரா மற்றும் சாரா ஆகிய திருநங்கைகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் டைட்டிலே உள்ளர்த்தம் கொண்டதாக ஆபாசமாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் திருநங்கைகளைப் பற்றி ஆபாசமாக சித்தரித்தும், இழிவுபடுத்தியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

மேலும், ஆபாசப் படமான இதை தடை செய்ய வேண்டும். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X