மீண்டும் வைரலாகும் வாத்தி கம்மிங்...அச்சு அசலாய் விஜய்யை போல் ஆடும் சிறுவன்
சென்னை : விஜய் நடித்து பொங்கலுக்கு ரிலீசான மாஸ்டர் படம் 50 வது நாளை நெருங்கி வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் இன்ட்ரோ பாடலான வாத்தி கம்மிங், ரொம்பவே பிரபலமாகி உள்ளது.
விஜய் ரசிகர்கள மட்டுமல்ல பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தோளை குலுக்கி போடும் ஸ்டெப் செமஹிட்டாகி உள்ளது.

வாத்தி கம்மிங் சாதனை
வாத்தி கம்மிங் பாடலை யூட்யூப்பில் இதுவரை 70 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே தியேட்டர், ஓடிடி என இரண்டிலும் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரபலங்களை ஈர்த்த வாத்தி கம்மிங்
கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகைகள் நஸ்ரியா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோக்கள் அதிக லைக்குகளை அள்ளி, வைரலாகின.
மீண்டும் வைரலாக்கிய சிறுவன்
தற்போது சிறுவன் ஒருவன் வாத்தி கம்மிங் முழு பாடலுக்கும் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது. இதில் விஜய் போட்ட அதே ஸ்டெப்களை போட்டு, ஒரே ஷாட்டில் முழு பாடலுக்கும் ஆடி முடித்துள்ளான். ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

விஜய்யும் பார்க்க போகிறார்
விஜய் ரசிகர்கள் இந்த சிறுவனின் ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த விஜய்யின் மேனேஜர் ஜெகதீசம், இதனை விஜய்யின் பார்வைக்கு கொண்டு செல்ல உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுவனுக்கும் வாய்ப்பு கிடைக்குமா
இதற்கு முன் விஜய்யின் மெர்சல் அரசன் பாடலுக்கு நடனமாடிய பிரஜூனா சாரஹ் என்ற சிறுமியின் வீடியோ வைரலானதை அடுத்து, பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் இந்த சிறுவனுக்கும் அதே போல வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











