மகன் போட்ட டல்கோனா காபி.. மெய் மறந்து போன சிம்ரன்.. குவியும் லைக்ஸ் !
சென்னை : டல்கோனா காபி போட்டு அசத்துகிறார் சிம்ரனின் மகன். இதுதொடர்பாக சிம்ரன் போட்ட படம் வைரலாகியுள்ளது.
Recommended Video
சினிமா நட்சத்திரங்கள் சமையல் செய்வது போய் அவரது பிள்ளைகள் சமையல் செய்வது ட்ரெண்டாகி வருகிறது. பெண்களை விட ஆண்களே சமையல் செய்வதில் கெட்டிக்காரர்கள். வீட்டில் தான் பெண்கள் சமையல் செய்கிறார்கள். ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில் ஆண்கள் தானே சமையல் வல்லுனர்கள்.

காபி என்றால் இன்ஸ்டன்ட் காபி, பில்டர் காபி மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால், சமீபத்தில் ஒரு விதமான டல்கோனா காபி ட்ரெண்டாகி வருகிறது. அதனை அனைத்து நடிகர், நடிகைகளும் ட்ரை செய்து அந்த வீடியோவை வைரலாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்த டல்கோனா காபி யூ டியூப்பை கூட விட்டுவைக்கவில்லை. அனைவரும் டல்கோனா காபி செய்வது எப்படி என்று யூ டியூப்பில் தேடி வருகின்றனர். அந்த அளவுக்கு பிரபலமாகி வருகிறது டல்கோனா காபி.

அந்த வரிசையில், நம்ம சிம்ரன் மகன் ஓடோவிற்கு காபி போட கற்றுத்தந்து இருக்கிறார். அதுவும், சாதாரண காபி இல்ல டல்கோனா காபி, சிம்ரன் சொல்ல சொல்ல அப்படியே செய்து முடித்துவிட்டார் ஓடோ. அதை போட்டோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிம்ரன். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
"முதலில் சமமான அளவில் சர்க்கரையும், இன்ஸ்டன்ட் காபி பொடியையும், கொஞ்சம் வெந்நீர் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரில் நன்றாக அதன் நிறம் மாறும் வரை அடித்து சூடான பால் மீது அதை போட்டால் சூடான டல்கோனா காபி ரெடி. அதையே குளிர்ந்த பாலில் கொஞ்சம் ஐஸ் போட்டு அதன் மேல் காபி கலவையை போட்டால் ஐஸ் கூல் காபி ரெடி அவ்வளவேதான்.

இவ்வாறு நம் செய்முறையை விட வித்யாசமாக காபி செய்வதும், சினிமா நட்சத்திரங்கள் பகிர்வதும் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனால் அனைவரும் டல்கோனாவை ட்ரை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது என்னப்பா டல்கோனா டீ யா என்று சிலர் கேலியும் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications











