twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    70களின் டிரெண்டிங்.. மறக்க முடியாத.. ஒய்யாரக்கொண்டைகள்.. ஒரு பிளாஷ்பேக் !

    |

    சென்னை : இடையில் ஆட்டம் போடும் ஒற்றை பின்னல், தழையத்தழைய எண்ணைவைத்து வாரி சீவிய ஜடை இவைதான் அந்த காலத்து பெண் கதாநாயகிகளின் ஹேர்ஸ்டைல்.

    Recommended Video

    Prabhas உடன் நடிக்க Deepika கேட்ட சம்பளம்

    வெளிநாட்டில் படித்த பெண் என்றாலோ , இல்லை மெத்தப்படித்த மேதாவி பெண் கதாபாத்திரம் என்றாலோ அவர்களை தனி அடையாளப்படுத்த அவர்களுக்கு என்று தனி ஸ்டைல் வைத்து இருந்தார்கள் அதுதான் இந்த பாலேட் கொண்டை, பண்ணுக்கு கொண்டை.

    என்ன .. கொண்டையா... என யோசிக்க வேண்டாம் அந்த காலத்து பழசுகளுக்குத்தான் தெரியும் அந்த கொண்டையின் மகிமை. இந்த கொண்டை ஹேர் ஸ்டைல் வடமாநிலத்தில திரைத்துறையில் இருந்து தமிழகத்திற்கு மெல்ல நுழைந்து தமிழக நடிகைகளின் பிடித்தமான ஹேர் ஸ்டைலானது எப்படி என்பது குறித்த ஒரு பிளாஷ்பேக்.

    கச்சிதமாக பொருந்தியது

    கச்சிதமாக பொருந்தியது

    பாலிவுட் பழம் பெரும் நடிகையான ஷர்மிளா தாகூர் நடிகர் சைஃப் அலிகானின் தாயார் ஆவர். 60வது 70வதுகளில் , பாலிவுட்டில் இவரின் கை தான் ஓங்கி இருந்தது. பல முன்னணி கதாநாயகர்களுக்கு இவர் தான் ஜோடி. ஆராதனா படத்தில் ராஜேஷ்கண்ணாவுடன் ‘மேரி சப்புனேகி ராணி‘ என்ற ஹிட்டடித்த பாடலில் இந்த ஒய்யாரக்கொண்டையை பார்க்கலாம். படித்த மேதாவி பெண் கதாபாத்திரத்திற்கு கன கச்சிதமாக பொருந்தி இருக்கும் இந்த கொண்டை.

    பிரபலமானது

    பிரபலமானது

    தமிழகத்தில் இந்த கொண்டை பிரபலமானதற்கு மிக முக்கியமானவர் வாணி ஸ்ரீ. தென்னிந்திய நடிகையான இவர் தமிழ் , தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப்பறந்தார். பல படங்களில் அடாவடிப் பெண்ணாக வரும் இவருக்கு இந்த கொண்டை எடுப்பாக பொருந்தியது. சிவாஜி கணேசனுடன் இவர் ஜோடிபோட்டு நடித்த வசந்தமாளிகை படத்தில் வரும் ‘மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன‘ என்ற பாடலில் இந்த பாலேட் கொண்டையை பார்க்கலாம். இந்த படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகளில் வாணி ஸ்ரீ இந்த கொண்டையுடனே வலம் வருவார் .

     ஒய்யாரக் கொண்டை

    ஒய்யாரக் கொண்டை

    நடிகைகள் சௌகார் ஜானகி அவர்கள் புதியபறவை படத்தில் வரும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ‘ என்ற பாடலில் இந்த ஒய்யாரக்கொண்டை ஆயிரம் கதை பேசி இருக்கும். இந்த படத்தில் சௌகார் ஜானகி வரும் ஒரு சில காட்சிகளிலும் இந்த ஒய்யாரக்கொண்டையுடனே வந்து இருப்பார். வைஜெயந்திமாலா, சரோஜா தேவி, ஜெயலலிதா என அனைத்து முன்னணி நடிகைகளும் ஒரு சில படத்திலாவது இந்த ஹேர் ஸ்டைலை பயன்படுத்தி இருப்பார்கள். அந்த காலத்துல இந்த பாலேட் கொண்டை தான் டிரெண்டிங்கான ஹேர் ஸ்டைல்.

    பஃப் வைச்சு

    பஃப் வைச்சு

    பாலேட் கொண்டையுடைய ஸ்பெஷலே, குட்டையோ , நெட்டையோ, குண்டோ ஒல்லியோ எந்த முகம் வடிவம் உள்ளவர்களுக்கு பொருந்தி விடும் என்பது தான். முடியை லேசா சீவி பஃப் வைச்சு அப்படியே அந்த அனைத்து முடியையும் ஒன்றாக சேர்ந்து பெண்டு போட்டு கொண்டை ஊசியில் குத்தினால் பாலேட் கொண்டை ரெடி.

    பிரமாதம்

    பிரமாதம்

    வெள்ளித்திரையை மட்டுமே ஆட்டிப்படைத்து வந்த, பாலேட் கொண்டை, பெரிய இடத்து திருமண வரவேற்பில் பெண்ணிண் சிகை அலங்காரமாக மாறியது. மணமகனுக்கு சூட்கோட், பெண்ணுக்கு பட்டுல குறுக்கு மாராப்பு சேலை, அதுல பஃப் வைச்சு இந்த கொண்டை என, திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஸ்டைலாகவே மாறியது இந்த பாலேட் கொண்டை.

    லூஸாப் போச்சு

    லூஸாப் போச்சு

    80ஸ் 90ஸ்ல, எந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி என்றாலும் அதுல இந்த கொண்டை தான் பிராதானமாக பிரமாதமாக இருக்கும். ஒரு காலத்துல ஆட்டிப்படைத்து வந்த இந்த கொண்டை இப்போ இருக்குற இடம் தெரியாம போச்சு. பிறந்த நாளோ காது குத்தோ, கல்யாணமோ எது என்றாலும் தலைவிரி கோலம் தான். அதுக்கு பேருத்தான் லூஸ் ஹேர் ஸ்டைலாம். என்ன சொல்லுங்க.. அந்தக் காலத்து கொண்டைங்களுக்கு இருக்கிற மவுசே தனிதான்.

    English summary
    Trending Hairstyle In The 70s.. A Flashback story on yesteryear heroines.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X