ட்ரண்டிங்கில் 50/50 பாடல்.. பூவையாருக்கு குவியும் பாராட்டு!

சென்னை: யோகிபாபு நடிக்கும் 50/50 படத்தின், யோகிபாபு அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார். தற்போது வெளியாகி உள்ள இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்துக்கொண்டு இருக்கிறது.

யோகி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் யோகி பாபு. யாமிருக்க பயமே என்ற படத்தின் மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தார். இதைத் தொடர்ந்துபல வெற்றிப்படங்களில் ஹீரோக்களுக்கு நண்பனா வந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். குறிப்பாக இவர் நடித்த கோலமாவு கோகிலா, சர்கார் போன்ற படங்களில் இவரை மிஞ்ச ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவரின் நகைச்சுவை அமைந்து இருக்கும்.

 Trending poovaiyar song in fifty fifty movie

அடுத்ததாக தர்மபிரபு படத்தில் எமதர்மன் கதாபாத்திரத்தில் காமெடியை விளாசி தள்ளி இருப்பார். இப்போது இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் தற்போது 50/50 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ''கோலமாவு கோகிலாவ கழட்டி விட்ட மன்மதன்" என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்துக்கொண்டு இருக்கிறது. இந்த பாடல் விஜய் டிவி புகழ் பூவையார் பாடியுள்ளார்.

சூப்பர் சிங்கர் சீசன்6ல் கானாப்படங்களை பாடி பிரமலமான பூவையார் அண்மையில் வெளிவந்த பிகில் படத்திலும் ஒரு பாடலை பாடி தெறிக்கவிட்டு இருப்பாரு. இப்போது ட்ராண்டிங்கில் உள்ள இப்பாடல் கேட்டு பூவையாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த ஆண்டின் சிறந்த பாடல் வரிசையில் இந்த பாடல் கட்டாயம் இடம் பிடிக்கும் என்றும், படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.

ஓரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையில் யோகிபாபு கலக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார்.

நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், கே.பி.ஒய். தீனா, நந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என ஒரு காமெடி பட்டாமே இப்படத்தில் இணைந்துள்ளனர். டிசம்பரில் இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X