விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணத்தில் அஜித்.. ரசிகர்கள் செய்த சூப்பர் விஷயம்.. அட வேற லெவல்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். உங்க விஜய் நா வரேன் என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இப்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். வாராவாரம் சனிக்கிழமை தொண்டர்களை சந்திக்கும் அவர் இன்று நாமக்கல்லில் வைத்து தனது தொண்டர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நடிகர் விஜய் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்த பிறகு அவருக்கென செல்வாக்கு வளர்ந்தது. இதன் காரணமாக அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். அதனை ஏற்று அவரும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கியதிலிருந்து அவரை எப்படியாவது கோட்டைக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதில் அவரது தொண்டர்கள் ஆர்வத்துடன் உழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகதான் டார்கெட்: விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் திமுகவிற்கு சாதகமாக செல்வார் என்று பலரும் கருதினார்கள். ஆனால் அவர் விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டிலேயே தன்னுடைய அரசியல் எதிரி திமுகதான் என்பதை பிரகடனப்படுத்திவிட்டார். அன்றிலிருந்து தான் ஏறும் மேடைகள் அனைத்திலுமே திமுகவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துவருகிறார் விஜய்.

விமர்சித்த திமுகவினர் செயலில் இறங்கிய விஜய்: திமுகவை விஜய் தொடர்ந்து விமர்சிப்பதை பார்த்த திமுகவினர் விஜய்க்கு தங்கள் பதிலடியை கொடுத்தனர். அந்த வகையில் அவர் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்று கடுமையான ட்ரோலை முன்வைத்தார்கள். நிலைமை இப்படி இருக்க உங்கள் விஜய் நான் வரேன் என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் அவர். திருச்சியில் ஆரம்பித்த அவரது அந்த சுற்றுப்பயணம் வாராவாரம் சனிக்கிழமை மட்டும் நடைபெறுகிறது.
இன்று நாமக்கல்லில்: அந்த வகையில் இன்று நாமக்கல்லில் வைத்து தனது தொண்டர்களை சந்தித்தார் அவர்ல் அப்போது வழக்கம் போல் பட்டாசு வெடிக்க பேசிய அவருக்கு தொண்டர்கள் உற்சாக ஆதரவை கொடுத்தார்கள். விஜய் வருவதை ஒட்டி அவர் பேசிய பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டமும் கூடியது குறிப்பிடத்தக்கது.
பரப்புரையில் அஜித்: இந்நிலையில் விஜய் பரப்புரை பேருந்தில் இருந்தபோது அவரும் அஜித்தும் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தின் ஃபோட்டோ ஒன்றை ஃப்ரேம் செய்து தொண்டர்கள் கொடுத்தார்கள். அதில் பிரியமுடன் விஜய் என்று எழுதி கையெழுத்தையும் போட்டுக்கொடுத்தார். இதை பார்த்த ரசிகர்கள் அட விஜய்யின் பரப்புரை பயணத்தில் அஜித்தும் இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











