ரஜினியின் அன்பு மகளுக்கு புதிய கொடி அறிமுகம்.. காரணம் என்ன?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் படத்தை பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் படத்தை கொண்டாடி வரும் நிலையில், திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்மன்றத்தினர் ஐஸ்வர்யாவிற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளனர்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் லால் சலாம். இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி இணையத்தை கலக்கியது. அதில், விளையாட்டில் மதத்தை கலந்திருக்கீங்க என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம் கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றமும் திரையில் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.

லால் சலாம் படத்தின் கதை: இந்த படத்தில், இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் (ரஜினிகாந்த்) நடித்துள்ளார். அவரது மகனான விக்ராந்த்தும், மொய்தீன் பாயின் நெருங்கிய நண்பரின் மகனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளனர்.
மத நல்லிணக்கம்: கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அது இந்து - முஸ்லிம் கலவரமாக மாறி இருவருக்கும் பிளவை ஏற்டுத்தி விடுகிறது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா என்பது தான் லால் சலாம் படத்தின் கதை.
ஐஸ்வர்யாவிற்கு கொடி: லால் சலாம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை திருச்சி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிமுகப்படுத்தி உள்ளது. கொடியை அறிமுகப்படுத்தி பேசிய நற்பணி மற்ற உறுப்பினர் ஒருவர், இன்று வெளியாகி உள்ள லால் சலாம் படம், மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற. இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு சிறந்த படம். இந்த படம் விருதை வாங்கும் படமாக மட்டும் இல்லாமல், மக்களின் மனதை வெகுவாக கவரக்கூடிய ஒரு ஜனரஞ்சகமான அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
கொடிக்கான காரணம்: இந்த படத்தை இயக்கிய தலைவரின் மகள் ஐஸ்வர்யா அவர்கள் இன்னும் பல சிறப்பான பல படங்களை இயக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும்,ஐஸ்வர்யா லால் சலாம் படத்தில் புரட்சிகரமான கருத்தை வைத்து இருக்கிறார் என்பதற்காக கொடியில் சிவப்பும், மிதமான முறையில் படத்தின் கதையை கொண்டு சொன்றதால், மஞ்சலும், அவர் என்றைக்கும் வெற்றி அடைய வேண்டும் என்பதால் அவரின் உருவத்தை பச்சையில் பொறுத்து இருப்பதாகவும். இந்த படம் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.


Click it and Unblock the Notifications











