லியோவுக்கு ஏன் இவ்வளவு வெறுப்புணர்வு.. போனில் திருச்சி ஸ்ரீதரை விளாசி எடுத்த விஜய் ஆர்மி!
சென்னை: தியேட்டர் உரிமையாளர் எனும் பெயரில் திருச்சி ஸ்ரீதர் லியோ படத்தின் வசூல் குறித்தும் தியேட்டருக்கு ஆளே வராமல் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் கூறி வந்த நிலையில், விஜய் ரசிகரான கார்த்திக் ரவிவர்மா போனில் பேசிய ஆடியோ வெளியாகி தீயாக பரவி வருகிறது.
நடிகர் விஜய்க்கு எதிராக சினிமா வட்டாரத்திலேயே பலர் இப்படி பொய்யான தகவலை யூடியூப்களில் அமர்ந்து கொண்டு பேட்டிகளாக சமீப காலமாக கொடுத்து படத்தை மொத்தமாக டிசாஸ்டர் ஆக்க வேண்டும் என்கிற நோக்கில் ஏன் செயல்படுகின்றனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதே வெறுப்புணர்வை தானே அடுத்து ரஜினிகாந்த் மற்றும் அஜித் படங்கள் வந்தால் விஜய் ரசிகர்களும் காட்டுவார்கள் என்றும் இந்த சண்டை இப்படியே பெரிதாகி போனால் தமிழ் சினிமாவுக்கு அது சாபக்கேடாக முடியும் என்றும் கூறுகின்றனர்.
பேச்சில் மட்டுமே பாசிட்டிவிட்டி: நடிகர்கள் வெளிப்படையாக மேடையில் பேசும் போது மட்டும் தான் பாசிட்டிவிட்டி கருத்துக்கள் வந்து விழுகிறது என்றும், மறைமுகமாக சினிமாவில் பெரிய போட்டி அரசியலுக்காக நெகட்டிவிட்டியை பரப்ப தனியாக ஐடி விங்கையே வைத்துக் கொண்டு முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் ரசிகர்களை பலி கடா ஆக்கி வருவதாக கூறுகின்றனர்.
காசு வாங்கிட்டு பேசுறாங்க: கொஞ்சம் பிரபலமாக மாறிவிட்டால் போதும் காசு வாங்கி விட்டு யூடியூபில் புதிய படங்களை பற்றியும் நடிகர்கள் பற்றியும் பேசி சர்ச்சையை கிளப்பி வருவதையே சிலர் வேலையாக கொண்டிருப்பதாக கூறுகின்றனர். லியோ படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் எதிர்மறை கருத்துக்களை பரப்பி படத்தை தோல்வி படமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதை விஜய் ரசிகர்கள் தோலுரித்து வருகின்றனர்.
சிக்கிய திருச்சி ஸ்ரீதர்: தியேட்டர் உரிமையாளர் எனக் கூறிக் கொண்டு லியோ திரைப்படம் ஃபிளாப் என பல யூடியூப்களில் திருச்சி ஸ்ரீதர் பேசி வரும் நிலையில், அவரை தொடர்ந்து கொண்டு கார்த்திக் ரவிவர்மா என்பவர் பேசிய ஆடியோ தீயாக பரவி வருகிறது. அதில், லியோ படத்தில் உலக வசூல் கணக்கு தனக்கு தெரியாது என்றும், லியோ படம் தோல்வி படம் என்றும் 80 சதவீதம் ஷேர் கேட்டு தியேட்டர் ஓனர்களுக்கு விஜய் தரப்பு தொல்லைக் கொடுத்ததாகவும் சிலர் சொன்னதை வைத்துத் தான் பேசினேன் என அந்தர் பல்டி அடித்துள்ளார். மேலும், திருச்சியில் உங்க தியேட்டர் பேர் என்ன சார்? என்கிற கேள்விக்கு கடைசி வரை அவர் பதிலே கூறவில்லை.


Click it and Unblock the Notifications











