அட்லீ முடியல.. அர்த்த பழசானக்கதை.. ஜவான் சுத்தமா நல்லாவே இல்லை.. பிரபலம் அதிரடி பேட்டி!
சென்னை: ஜவான் படம் சுத்தமா நல்லாவே இல்லை 80 படத்தோட சீன்களை எடுத்து படத்தில் வைத்து இருக்கிறார் என்று திருச்சி ஸ்ரீதர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் தயாரித்திருந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலை அள்ளி வரும் போதும் இணையத்தில் இப்படம் குறித்து பல நெகடிவ் விமர்சனம் எழுந்து வருகிறது.
80சீனுமே பார்த்ததுதான்: இந்நிலையில், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஜவான் படத்தில் ஒரு 80 சீன் இருக்கு என்றால், அந்த 80 சீனும் ஏதோ ஒரு படத்தில் பார்த்தது போலவே இருக்கிறது. ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா என அனைவரின் நடிப்பையும் வீணாக்கிவிட்டார் அட்லீ.
பழையக்கதை: விவசாயம், ராணுவம், ஊழல் என படம் அர்த்தப்பழசானக் கதை, படத்தில் எந்த ஒரு சீனுமே புதுசா இல்லை. இந்த படத்தின் வசூல் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் படமாக பார்க்கும் போது படம் எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை. அனிருத்தின் இசை மட்டும்தான் கேட்கும்படி இருக்கும், மத்தபடி படத்தில் ஒன்னுமே இல்லை.
புதுசா எதுவும் இல்லை: அட்லீ திரைக்கதையில் கவனத்தை செலுத்தி இந்த படத்தில் எதையுமே செய்யவில்லை, படம் முழுக்க ஷாருக்கானை ஹைப் ஏத்திகாட்டி இருக்கிறார். மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே இல்லை. ஆனால், படத்தில் ஜவான் படம் 3 ஆயிரம் கோடி வசூல் ஆச்சுனு சொல்லுவாங்க என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜவான் வசூல்: ஜவான் திரைப்படம் 130 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல், இரண்டாவது நாளில் 110 கோடி வசூல் என, முதல் இரண்டு நாட்களில் 240 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது. இதனால், வார இறுதி நாட்களில் ஜவான் கலெக்ஷன் இன்னும் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











