நெப்போலியன் மகன் திருமணத்தில் நடந்தது இதுதான்.. பணம் கொடுத்து நடிகைகளை வரவெச்சாரா? பகீர் தகவல்!

சென்னை: நெப்போலியன் மகன் தனுசுக்கு திருமணமாகி இரண்டு மாதத்திற்கு மேல் ஆனாலும் அந்த திருமணம் குறித்த சர்ச்சை தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அரசியல் பிரமுகர்களில் முக்கியமான ஒருவர், நெப்போலியன் மகன் திருமணத்தில் இதுதான் நடந்தது என்றும். பணம் கொடுத்து தான் நடிகைகளை நெப்போலியன் அங்கு வர வைத்தார் என்றும் பகீர் தகவலை கூறி இருக்கிறார்.

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் அக்ஷயாவிற்கும் ஜப்பானில் திருமணம் நடந்தது. ஜப்பானே வியந்து போகும் அளவிற்கு நடந்த இந்த திருமண வீடியோ இணையத்தில் டிரெண்டாகின்றன. சமூக வலைத்தளத்தில் இவர்களின் திருமணம் குறித்த பல விஷயங்கள் பேசுபொருளானது. இதுகுறித்து, திமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா பேட்டி அளித்துள்ளார்.

nepoleon dhanush trichy surya

எல்லாம் பணத்திமிர்: அதில், நெப்போலியன் மகனின் திருமணத்தை பொருத்த வரைக்கும் அவர் செய்த விஷயம் மிகப் பெரிய தவறு. ஒரு தகப்பனாக அவர் செய்தது சரி என்றாலும் பொதுமக்கள் பார்வையில், சாமானியனின் ஒருவரின் பார்வையில் அவர் செய்தது மிகப்பெரிய தவறு. பணம் இருக்கிறது என்பதற்காக, பணத்திமிரில் இதுபோன்ற விஷயத்தை நெப்போலியன் செய்திருக்கிறார். சினிமாவில் நெப்போலியன் உச்சத்தில் இருந்த போது கூட, அவர் பெரிய அளவில் சம்பாதித்து கோடி கோடியாக பணத்தை வைத்து இருக்கவில்லை. ஒரு சாதாரண நடிகராகத்தான் இருந்தார்.

கோடி கோடியான சொத்து: மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கேயே பண்ணை தொழில் செய்து செட்டில் ஆகி கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். அப்போது தான், நெப்போலியன் மகன் தனுஷ் youtuber இர்ஃபானே பார்க்க ஆசைப்பட்டார். உடனே நெப்போலியன் இர்ஃபானிடம் பேசி, விமான டிக்கெட் போட்டு இர்ஃபானை அமெரிக்காவிற்கு வரவைத்தார். அமெரிக்காவில் நெப்போலியன் ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டார்.அது நெப்போலியனுக்கு சினிமாவில் கிடைத்த புகழை விட மிகப்பெரிய அளவு புகழை தேடி தந்தது.

பணம் கொடுத்தார்: அதைத்தொடர்ந்து தான் மீண்டும் திருமணத்திற்கு இர்பானை அழைத்து வீடியோவாக பதிவிட்டுள்ளார். அவர் மட்டுமில்லை நடிகைகள் மீனா, ராதிகா, குஷ்பூ, சுஹாசனி, சரத்குமார், கலா மாஸ்டர் என அனைவருமே பணம் கொடுத்து தான் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார்கள். மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட நெப்போலியன், உறவினர்களை அழைத்து திருமணம் செய்து இருக்கலாமே. இதற்கெல்லாம் காரணம் பணம் இருக்கிறது என்ற திமிரில் தானே.

பணம் இருந்தால் போதுமா: சாதாரண ஏழைமையான குடும்பத்தில் பிறந்ததால் அக்ஷயாவிற்கு இன்று நெப்போலியன் குடும்பத்தின் பிரம்மாண்டமான சொகுசு வாழ்க்கை பிடித்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் அந்த பெண்ணுக்கு வாழ்க்கையில் எந்தவிதமான சந்தோஷமும் கிடைக்காது. நாம் எதையோ தொலைத்து விட்டோம் என்று அந்தப் பெண் நிச்சயமாக வருத்தப்படுவார்.ஏழ்மையான குடும்பம் என்பதால், அந்த பெண்ணின் பெற்றோரும், மகள் பண கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து இந்த திருமணத்திற்கு சம்மதித்துவிட்டார்கள். பணம் இருந்துவிட்டால் போதுமா? நெப்போலியனுக்கு ஒரு மகள் இருந்து இருந்தால், இவர், இதுபோல குறைபாடுள்ள ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைப்பாரா? பணத் திமிரால் அவர் செய்ததை, பலர் தியாகி போல சித்தரித்து பேசி வருகின்றனர் என்று அந்த அரசியல் பிரமுகர் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X