பாய்காட் எல்லாம் சும்மா.. நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட பதான்.. ஷாருக்கானை புகழ்ந்த எம்பி!

சென்னை : பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்த பதான் படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ ப்ரைன் பாராட்டினார்.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் தீபிகா படுகோனே, சல்மான் கான், ஜான் ஆப்ரகம், டிப்பிள் கபாடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம் பெற்ற 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனேவின் காவி நிற பிகினி அணிந்திருந்ததாக கூறி இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஷாருக்கானின் பதான்

ஷாருக்கானின் பதான்

இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் பான் இந்தியா படமாக ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்த படம் தியேட்டரில் வெளியானதால், திரையரங்கிற்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. முதல் நாளில் உலகம் முழுவதும் 106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பதான் திரைப்படம் வெளியாகி இன்றோடு12 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் படம் ரூ.832 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.515 கோடியை வசூலித்து உள்ளதால், ஷாருக்கானின் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட பதான்

நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட பதான்

இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ ப்ரைன், பதான் படத்தை வெகுவாக பாராட்டி நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், ஷாருக்கான் நடித்த பதான் ஒரு அழகான கருத்தை கூறியுள்ளது. இப்படத்தின் பின்னணியில் இருந்தவர்கள் "இந்தியாவின் மிகப்பெரிய தூதர்கள்" என்றும் பாராட்டினார்.

வெல்டன் சித்தார்த் ஆனந்த்

வெல்டன் சித்தார்த் ஆனந்த்

வெல்டன் சித்தார்த் ஆனந்த், பதான் படத்தை தயாரித்த உங்களுக்கு நன்றி, எங்களால் செய்ய முடியாததை ஷாருக்கானும், டிம்பிள் கபாடியாவும், ஜான் ஆபிரகாமும் இந்த நாட்டிற்காக செய்துள்ளீர்கள். பதான் படத்தை புறக்கணிக்கச் சொன்னீர்கள், ஆனால், அவர்கள் உங்களுக்கு ஒரு அழகான செய்தியுடன் ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார்கள் என்று டெரிக் ஓ ப்ரைன் பாராட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X