மாதுரியின் முதல் படத்தில் ஜோடி போட்டவராம் “வாய்க்கொழுப்பு” தபஸ் பால்!

By Sudha

கொல்கத்தா: வாய்க்கொழுப்புடன் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முன்னாள் நடிகரும், திரினமூல் காங்கிரஸ் எம்.பியுமான தபஸ் பால், நடிகை மாதுரி தீட்சித்தின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவராம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்களை பலாத்காரம் செய்ய எனது ஆதரவாளர்களை ஏவுவேன் என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தபஸ் பால்.

தபஸ் பேச்சுக்க அவரது மனைவி முதல் முதல்வர் மமதா பானர்ஜி வரை பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தபஸின் திரையுலக வாழ்க்கை குறித்த சில விவரங்கள் தெரிய வந்துள்ளன.

மாதுரியின் முதல் ஹீரோ

மாதுரியின் முதல் ஹீரோ

நடிகை மாதுரி தீட்சித் 1986ம் ஆண்டு அபோத் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவராம் இந்த தபஸ்.

முதிர்ச்சி அடைந்த கணவராக

முதிர்ச்சி அடைந்த கணவராக

இந்தப் படத்தில் குழந்தைத்தனம் மிக்க பெண்ணாக நடித்திருந்தார் மாதுரி. அவரது கணவராக, அறிவு முதிர்ச்சி அடைந்தவராக சங்கர் சிங் என்ற கேரக்டரில் நடித்திருந்தாராம் தபஸ் பால்.

பிலிம்பேர் விருது வேற…

பிலிம்பேர் விருது வேற…

இவர் சாஹேப் என்ற படத்தில் நடித்தமைக்காக 1980ம் ஆண்டு பிலிம்பேர் விருது வாங்கியவர்.

பெங்காலிப் படமே அதிகம்

பெங்காலிப் படமே அதிகம்

அதிகம் பெங்காலிப் படங்களில்தான் தபஸ் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவை தாதர் கீர்த்தி, பாலோபசா பாலோபசா, கிலாடி.

மனைவியும் நடிகைதான்

மனைவியும் நடிகைதான்

இவரது மனைவி நந்தினி பாலும் கூட நடிகைதான். பெங்காலிப் படங்களில் நடித்தவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X