இதுதான் ட்ரிப்பா.. சுனைனாவ கட்டிப் போட்டு.. யோகி பாபுவும், கருணாகரனும் என்ன பண்றாங்க பாருங்க!

சென்னை: டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, சுனைனா, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுனைனாவை ஒரு ஜீப்பின் மீது கட்டிவைத்து, யோகி பாபுவும், கருணாகரனும் சீட்டு ஆடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டார்.

ட்ரிப் ஃபர்ஸ்ட் லுக்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜி.வி. பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜீப் மீது காயங்களுடன் கட்டப்பட்டுள்ள சுனைனா அமர்ந்திருக்க, யோகி பாபு மற்றும் கருணாகரன் சீட்டு ஆடும் விதமாக வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சுனைனா நன்றி

ஜி.வி. பிரகாஷ் குமார் ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில், அந்த படத்தின் நாயகி சுனைனா கமெண்டில் நன்றி தெரிவித்துள்ளார்.

புது ரூட்டில் சுனைனா

புது ரூட்டில் சுனைனா

காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமான சுனைனா, அதற்கு பிறகு சில படங்களில் மட்டுமே தலை காட்டினார். விஜய்யின் தெறி படத்தில் சின்ன ரோலில் நடித்த சுனைனா, தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் முக்கியமான ரோல் செய்த சுனைனா நடிப்பில் ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

கடத்தல் படமா?

கடத்தல் படமா?

ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே இது ஒரு கடத்தல் படம் தான் என்பது தெளிவாக தெரிகிறது. பணக்கார வீட்டுப் பெண் சுனைனாவை யாருக்காகவோ யோகி பாபு மற்றும் கருணாகரன் கடத்தி கட்டி வைத்துள்ளனர். கடத்த சொன்னவன் வருவானா, இல்லை சுனைனாவிற்கு இவர்கள் இருவரும் உதவுவார்களா என்கிற ரீதியில் படம் நகரும் என்பது யூகிக்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

மரண வெயிட்டிங்

ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், சென்னை அளவில் #TRIP ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சுனைனாவின் ரசிகர்கள் இந்த படத்திற்காக மரண வெயிட்டிங் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

யோகி பாபு ட்வீட்

ட்ரிப் படத்தின் மற்றுமொரு புதிய போஸ்டரை நடிகர் யோகி பாபு ட்வீட் செய்துள்ளார். கையில் பயங்கர கத்தியுடன் ரத்தக் களறியாக அவர் நிற்கும் போஸ்டர் டிரெண்டாகி வருகிறது.

வருஷத்துக்கு 56 படம்

மாசத்துக்கு 4 படம் வருஷத்துக்கு 56 படம் கலக்குங்க என யோகி பாபுவுக்கு இந்த ரசிகர் வாழ்த்து கூறியுள்ளார்.

எந்த படத்தின் காப்பி?

எந்த ஹாலிவுட்/ கொரியன் படத்தின் காப்பியோ தெரியலையே என இந்த நெட்டிசன் கலாய்த்து வருகிறார். தமிழ் சினிமாவில் வரும் பல படங்கள் இப்போதெல்லாம் காப்பி அடித்துத் தானே எடுக்கப்படுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X