Just In
- 1 hr ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 2 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 2 hrs ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 2 hrs ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
Don't Miss!
- News
மனித உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை... மக்கள் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியீடு..!
- Sports
கீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.. நடராஜன் மீது பிக்ஸிங் புகார்.. கங்குலி என்ன செய்யப் போகிறார்?
- Finance
இரண்டே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. இதே 10 முக்கிய காரணங்கள்..!
- Automobiles
எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்!! பிப்ரவரியில் அறிமுகமாகுகிறது
- Lifestyle
உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ட்ரிபில்ஸ் வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்.. வாணி போஜன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்!
சென்னை: ஜெய், வாணி போஜன் நடிப்பில் ஹாட் ஸ்டார் ஒரிஜினலாக வெளிவரவிருக்கும் வெப் சீரியஸ் தான் ட்ரிபில்ஸ். இந்த வெப் சீரியஸ்-ன் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.
ஜெய், வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கும் இந்த வெப் தொடரை சாருகேஷ் சேகர் இயக்க, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கிறார்.
மூன்று நண்பர்கள் இடையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு நம்மை மகிழ்விக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்பது ட்ரெய்லரில் தெரிகிறது.

முதல் முறையாக இணையும் ஜோடி
படங்களில் மட்டும் நடித்து வந்த ஜெய் - வாணி போஜன் முதல் முறையாக வெப் சீரியஸில் ஜோடி சேர்ந்துள்ளனர். இருவரின் பொருத்தமும் ட்ரைலரில் பக்காவாக பொருந்தி இருக்கிறது. ஆதலால் வெப் தொடரில் இருவருக்கும் இடையே வரும் காதல் காட்சிகள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

புது வழி சரி வருமா?
சில வருடங்களகாக படங்கள் நடித்து வந்தாலும் 3,4 படங்களை தவிர வேறு எதுவும் நடிகர் ஜெய்-க்கு கை கொடுக்கவில்லை. கடைசியாக அவரின் நடிப்பில் தமிழில் வெளியான கேப்மாரி திரைப்படமும் சோபிக்கவில்லை. அதையடுத்து வெளிவரவிருப்பது இந்த தொடராகும். இது நல்ல வரவேற்பை பெற்றால் மட்டுமே அவருக்கு நிலைமை சாதகமாக அமையும்.

நல்ல வரவேற்பு
சின்ன திரையில் கலக்கி வந்த வாணி போஜன் வெள்ளி திரையிலும் ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்டார் அந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அது போல இந்த தொடரும் கை கொடுத்தால் அடுத்த லெவலுக்கு வாணி போஜன் சென்று விடுவார்.

ஹாட் ஸ்டார் ஸ்பெஷல்
தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது, அதையடுத்து ட்ரிபில்ஸ் வெப் சீரியஸ் வெளிவரவுள்ளது. அது மட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலீகாஸ்ட், ராம் சுப்ரமணியம் இயக்கத்தில் நவம்பர் ஸ்டோரி ஆகிய வெப் தொடர்கள் ஹாட் ஸ்டார் ஸ்பெஷலாக வெளிவரவுள்ளது.

வாணி ரசிகர்களுக்கு ட்ரீட்
நேற்று ட்ரெய்லர் வெளியான நிலையில் அதனுடன் சேர்த்து ரிலீஸ் தேதியையும் ஹாட் ஸ்டார் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 11 அன்று ஹாட் ஸ்டாரில் மட்டும் அதிகாரபூர்வமாக வெளிவரவுள்ளது ட்ரிபில்ஸ். இது வாணி போஜன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.