»   »  திரிஷா ஆபாச சிடி - ஒருவர் கைது

திரிஷா ஆபாச சிடி - ஒருவர் கைது

Subscribe to Oneindia Tamil

திரிஷாவைப் போன்ற பெண்ணின் ஆபாசப் படங்கள் அடங்கிய செல்போன் மெமரி கார்டுகள், சிடிக்கள் மற்றும் டிவிடிக்களை பெங்களூர் போலீஸார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

திரிஷாவைப் பற்றி ஏராளமான வதந்திகள், செய்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் தான் உள்ளன.

திரிஷாவின் குளியல் காட்சிகள் அடங்கிய படங்கள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில காலத்துக்கு முன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா மறுத்தார்.

மேலும் திரிஷாவின் மூலிகைக் குளியல் காட்சிகள் அடங்கிய புகைப் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தின.

இந் நிலையில் திரிஷா குறித்த ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. திரிஷாவின் ஆபாசப் படங்கள், காட்சிகள் என்ற பெயரில் சிடிக்கள் மற்றும் டிவிடிக்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு நபரை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இதுபோன்ற சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் சென்னை மற்றும் புறநகர்களில் படு சூடாக விற்பனையாகி வந்தன.

மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களிலும் கூட இந்த வீடியோக்கள் படு சுறுசுறுப்பாக விற்றுக் கொண்டிருக்கிறதாம்.

பிளாட்பாரக் கடைகளிலேயே இந்த சிடிக்கள் விற்கப்படுவதாகவும், ஒரு சிடியின் விலை ரூ. 30 மட்டுமே என்றும் செய்திகள் கூறுகின்றன.

இந் நிலையில், பெங்களூரில் திரிஷாவைப் போன்ற பெண் அடங்கிய ஆபாச காட்சிகளை செல்போன் மெமரி கார்டுகளில் ஏற்றி அவற்றை விற்று அசத்தியுள்ளனர். இவற்றை கம்ப்யூட்டர்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் பொருத்தி பெரிய சைசில் பார்க்க முடியும்.

இந்த ஆபாச காட்சிகள் அடங்கிய ஒரு மெமரி கார்டின் விலை ரூ. 2,000. இதுகுறித்த புகார்கள் பெங்களூர் காவல்துறைக்கு போனது. இதையடுத்து சாம்ராஜ்பேட்டைக்கு விரைந்த போலீஸ் படை அங்கு பெருமளவில் ஆபாசக் காட்சிகள் அடங்கிய மெமரி கார்டுகள், குவித்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து போலீஸார் திடுக்கிட்டனர்.

இதையடுத்து அந்த மெமரி கார்டுளையும் ஆபாச காட்சிகள் அடங்கிய சிடிக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம் ஆகும். கடை உரிமையாளர் ருக்முதீன் கைது செய்யப்பட்டார்.

இவை தவிர மேலும் பல நடிகைகளின் ஆபாசக் காட்சிகள் அடங்கிய சிடிக்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சிடிக்களில் உள்ள நடிகைகளின் ஆபாசக் காட்சிகள் உண்மையானவையா? அல்லது கிராபிக்ஸ் காட்சிகளா? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil