»   »  திரிஷா படத்துக்கு சிக்கல்!

திரிஷா படத்துக்கு சிக்கல்!

Subscribe to Oneindia Tamil
ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில்ஏகப்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இப்படத்திற்கு தணிக்கைச்சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்து விட்டது.

இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விலங்குகளை வைத்துப் படம்எடுத்தால், பிராணிகள் நல வாரியத்திடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறவேண்டும்.

அப்போதுதான் தணிக்கை குழு சான்றிதழ் வழங்க முடியும் என தணிக்கைக் குழுகூறியுள்ளது. மும்பை நீதிமன்றத்தின் ஒரு உத்தரவை அடிப்படையாக வைத்துஇந்தியா முழுவதும் உள்ள தணிக்கைக் குழுக்கள் இவ்வாறு கூறி வருவதால் 80க்கும்மேற்பட்ட படங்கள் சிக்கலில் உள்ளன.

தமிழில் ஷங்கர் தயாரித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திற்கும் இந்த சிக்கல்எழுந்தது. இதையடுத்து முதல்வர் கருணாநிதியை ஷங்கர், நடிகர் வடிவேலு,இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் சந்தித்து இந்த விவகாரத்தில் உதவ வேண்டும்என்று கோரினர்.

சம்பந்தப்பட்ட பிராணிகள் நல வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைஅமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்தத் துறைக்கு திமுகவைச் சேர்ந்த ராஜாதான்அமைச்சராக உள்ளார்.

அவரிடம் கருணாநிதி பேசி, சிக்கலில் சிக்கித் தவிக்கும் இம்சை அரசன் உள்ளிட்ட 5படங்களுக்கு தடையை நீக்க கோரினார். அதை ஏற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாஉடனடியாக இந்தப் படங்களுக்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்கபிராணிகள் நல வாரியத்திற்கு அறிவுறுத்தினார்.

அவர்களும் வழங்கவே இப்போது இந்தப் படங்களுக்கு தடை நீங்கியுள்ளது. இந்தநிலையில் ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்படத்திற்கும் இதே சிக்கல் எழுந்துள்ளது. இப்படத்தில் நாய், ஆடு, பசு, குதிரைஉள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதால், பிராணிகள் நல வாரியத்தின் சான்றிதழ் பெறவேண்டும் என்று தணிக்கைக் குழு கூறி விட்டது.

இதைத் தொடர்ந்து படத்தைத் தயாரித்துள்ள லட்சுமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம்சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் இதுதொடர்பாக தணிக்கைக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil